TamilSaaga

சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி 2024 ஆம் ஆண்டில் தாறுமாறாக இருக்கும்… பொருளாதார நிபுணர்கள் அறிக்கை!!

சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி ஆனது 2024 ஆம் ஆண்டில் தொடர்ந்து ஏறு முகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக செய்தி வெளியாகி உள்ளது. 2023 ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் பொருளாதாரம் மந்தநிலையை எட்டிய நிலையில் 2024 ஆம் ஆண்டு அதனை சமாளிக்கும் வகையில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு பணம் வீக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு பண வீக்கமும் மெதுவாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் பொருட்களுக்கான சேவை வரி உயர்த்தப்பட்டாலும் பணவீக்கம் அதிகரிக்காது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முற்பகுதியில் சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி ஆனது 1.5 சதவீதம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு புது வேகம் எடுக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் பொருட்களின் தேவை அதிகப்படியாக இருப்பதால் சிங்கப்பூரின் ஏற்றுமதியும் அதிகரிக்கும் எனவும் அதன் மூலம் நாட்டின் வருவாயும் வளர்ச்சி அடையும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும் வட்டி விகிதத்திலும் அது பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 2024ம் ஆண்டின் இரண்டாவது பாதியில் அதிகரிக்கும் என சிங்கப்பூர் நாணய ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது .2022 ஆம் ஆண்டிலிருந்து மின்னியல் பொருட்களுக்கான தேவை குறைந்து இருந்ததால் அதன் ஏற்றுமதி குறைந்து வட்டி விகிதத்திலும் உயர்வு காணப்பட்டது. மேலும் எண்ணெய் அல்லாத ஏற்றுமதிகள் குறைந்ததால் இந்த காலகட்டத்தில் உலகளாவிய வட்டி விகித உயர்வால் நிதி துறையும் பெருமளவு பாதிக்கப்பட்டது. மேலும் கொரோனா நோய் தொற்றின் காரணமாக ஒட்டுமொத்த பொருளாதார நிலையும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது மெது மெதுவாக அதிலிருந்து மீண்டு வருவதன் காரணமாக 2024 ஆம் ஆண்டில் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts