TamilSaaga

வான் மற்றும் கடல் வழி.. சிங்கப்பூருக்குள் நுழையும் அனைவரும் “SGACஐ சமர்ப்பிக்க வேண்டும்”.. நினைவூட்டும் ICA – எப்படி சமர்ப்பிக்கலாம்?

நீங்கள் விமானம் அல்லது கடல் வழியாக சிங்கப்பூருக்குப் பயணம் செய்து வருகிறீர்கள் என்றால், உங்கள் SG வருகை அட்டையை (SGAC) கட்டாயம் சமர்ப்பிக்க மறக்காதீர்கள். சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) கடந்த ஜூலை 8ம் தேதி தனது முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.

அதில் “சிங்கப்பூரர்கள் உட்பட, விமானம் அல்லது கடல் வழியாக வரும் அனைத்துப் பயணிகளும், சிங்கப்பூர் வருவதற்கு முன்பு தங்கள் SGACச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறோம்” என்றது. இந்த படிவத்தைச் சமர்ப்பிக்க, SGAC இ-சேவை இணையதளத்திற்குச் சென்று, பொருத்தமான போர்ட்டலைத் தேர்ந்தெடுத்து படிவத்தை நிரப்ப வேண்டும்.

ICA இணையதளம், MyICA ஆப்ஸ், இலவச SGAC இ-சேவை உள்ளிட்ட அதிகாரப்பூர்வ சேவைகள் மூலம் மட்டுமே உங்கள் SGACஐச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ICA பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நீங்கள் சிங்கப்பூருக்கு வந்த மூன்று நாட்களுக்குள் மட்டுமே படிவம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

உதாரணமாக, நீங்கள் ஜூன் 30 அன்று சிங்கப்பூருக்கு வருகிறீர்கள் என்றால், ஜூன் 28 அல்லது அதற்குப் பிறகு மட்டுமே உங்கள் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு உங்கள் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டால், நீங்கள் புதிய ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.

இலங்கையில் நீடிக்கும் பதட்டம்.. ஜனாதிபதி மாளிகை முற்றுகை – அங்குள்ள சிங்கப்பூரர்கள் என்ன செய்ய வேண்டும்? MFA விடுக்கும் எச்சரிக்கை!

அதேபோல SGAC வலைப்பக்கத்தின்படி, குடியேற்ற அனுமதி பெறாமல் சிங்கப்பூர் வழியாகச் செல்பவர்கள் அல்லது இடமாற்றம் செய்பவர்கள் (Transit) இந்த படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. மேலும் இந்தத் தேவை அனைத்து சிங்கப்பூரர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts