TamilSaaga

சிங்கப்பூர் – திருச்சி : இருமார்கமாக இம்மாத விமான டிக்கெட் இல்லை – கூடுதல் விமான இயக்க வாய்ப்பு?

சிங்கப்பூரில் இருந்து தமிழர்கள் திருச்சி வருவதற்கு மட்டுமல்ல, மீண்டும் சிங்கப்பூர் செல்லவும் விமான சேவைகள் நடப்பில் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வரும் 29ம் தேதி முதல் கூடுதல் விமான சேவைகளுக்கு வாய்ப்புள்ளதாக சிங்கப்பூர் அரசு கூறியுள்ளது என்றும் நமது தமிழ் சாகா சிங்கப்பூருக்கு நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. மேலும் நாளை முதல் சிங்கப்பூர் செல்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்வும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூர், மலேசியாவிற்கு கூடுதல் விமான சேவை வேண்டும் – வைகோ

அண்டை நாடான இந்தியாவின் பல பகுதிகளுக்கு தற்போது வந்தே பாரத் திட்டத்தின் மூலம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் சிங்கப்பூரில் இருந்து அனுதினம் சென்று வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை Air bubble மற்றும் வந்தே பாரத் சேவைகளை தவிர பிற பன்னாட்டு விமான சேவைகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வெகு சில நாடுகளுக்கு பன்னாட்டு விமான சேவையை அளித்து வருகின்றது இந்தியா.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிங்கப்பூர் முதல் தமிழகத்தின் திருச்சிக்கு மற்றும் தலைநகர் சென்னைக்கு செல்ல விமானங்கள் இல்லாமல் பெரிய அளவில் மக்கள் தவித்து வந்தனர். திருச்சி, சென்னை, கொச்சி உள்ளிட்ட பல இந்திய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டாலும் புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களில் டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்து விடுகின்றன. இதனால் மக்கள் குறித்த நேரத்தில் தங்களுடைய அவசர தேவைக்காக சிங்கப்பூரில் இருந்து தாயகம் திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

இதனால் கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என்று பலரும் இரு நாட்டு அரசிடமும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சில கூடுதல் விமானங்கள் இயக்கப்பட்டாலும் அந்த டிக்கெட்களும் சில மணி நேரத்தில் தீர்ந்து விடுகின்றன. ஆகையால் இந்திய அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு பயணிகளுக்கு உதவ வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தகவல் : நந்தனா ஏர் ட்ராவல்ஸ் திருச்சி – 9600223091

Related posts