TamilSaaga

குறைந்தது இந்திய ஊழியர்களின் வருகை – சீனாவிலிருந்து ஊழியர்களை வரவழைக்க தற்காலிகத் திட்டம்

அண்டை நாடுகளான இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகம் உள்ளதால் கட்டுமானத்துறையில் ஊழியர்களின் பற்றாக்குறை சிங்கப்பூரில் பெருமளவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கட்டுமானத்துறையில் ஊழியர் பற்றாக்குறையைப் போக்குவதற்காக கடந்த மே மாதம் திட்டமொன்று துவங்கப்பட்டது. சிங்கப்பூருக்கு சீனாவிலிருந்து கட்டுமான ஊழியர்களை வரவழைக்கும் தற்காலிக திட்டத்திற்கு தற்போது சுமார் 200 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

இந்த திட்டத்தின் மூலம் ஊழியர்கள் தங்களின் திறன் மதிப்பீட்டு சான்றிதழ் பெறுவதற்கு முன்னதாகவே இங்கு சிங்கப்பூர் வருவதற்கு இந்த திட்டம் வழிவகுக்கும். மேலும் சீனாவில் இருந்து சிங்கப்பூருக்கு வரவழைக்கப்படும் ஊழியர்கள் ஐந்து பயிற்சி நிலையங்களில் திறன் மதிப்பீட்டு சான்றிதழ்களை அவர்கள் பெற்றுக்கொள்ளும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தாயகத்தில் இந்த சான்றிதழை பெறமுடியாத ஊழியர்கள், இந்த நிலையங்கள் மூலம் பயிற்சி பெறலாம். இருப்பினும் சீனாவிலிருந்து ஊழியர்கள் சிங்கப்பூர் வருவதற்கு மூன்று முதல் நான்கு வார கால அவகாசம் தேவைப்படலாம்.

இதுவரை 1300 ஊழியர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு நவம்பர் மாதத்திலிருந்து நடப்பில் இருந்த இந்த திட்டத்தில் சேர எந்த நிறுவனங்களும் ஆர்வம் காட்டாத நிலையில்.

அதற்கு முக்கிய காரணமாக ஊழியர்கள் ஒவ்வொருவரும் திறன் மதிப்பிடுவதற்கு ஆயிரம் வெள்ளி கூடுதலாக செலவிட வேண்டி இருப்பது தெரியவந்துள்ளது.

Related posts