TamilSaaga

“மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்” – தமிழர்கள் அனைவரும் மகிழ்வோடு கொண்டாடும் “மெட்ராஸ் தினம்”

சென்னை, இன்று உலகம் போற்றும் எத்தனையோ கலைஞர்களை அடையாளம் கண்ட தாய் பூமி 1939ம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்து சென்னை மாநகரம் இன்று தனது 382 ஆண்டை இன்று நிறைவு செய்துள்ளது நமது சிங்காரச் சென்னை. ஆண்டுதோறும் இந்த நாள் வெகு விமர்சையாக “மெட்ராஸ் தினம்” என்று கொண்டாடப்படுகிறது.

மெட்ராஸ், இன்றளவும் தமிழகத்தின் ICU வார்டு என்று கூறினால் அது சற்றும் மிகையல்ல. பிழைப்பை தேடி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சென்னை வந்தவர்கள் இன்று அனைவரும் அண்ணார்ந்து பார்க்கும் உயரத்தில் உள்ளனர். தொழில்துறை, கலைத்துறை, சுற்றுலா, ஆடம்பர வாழ்க்கை, நடுத்தர வாழ்க்கை என்ற அனைத்து ஒன்றே ஒருங்கிணைந்த ஒரு சிறப்பான நகரம்.

கடந்த 2004ம் ஆண்டு முதல் சென்னை தினம் என்பது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1996ம் ஆண்டுக்கு முன்பு இந்த நகரம் மதராசு பட்டணம், மெட்ராஸ் மற்றும் சென்னைப்பட்டினம் என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது. வங்காள விரிகுடா கரையில் அமைந்துள்ள துறைமுக நகரங்களில் ஒன்று நான் நமது சென்னை.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுமார் ஒரு கோடி மக்கள் வாழும் நகரமாக தற்போது திகழ்ந்து வருகின்றது சென்னை. மேலும் உலகின் 35 பெரிய மாநகரங்களுள் சென்னையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 17ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் சென்னையில் முதன் முதலில் கால் பதித்த நாள் முதல் சென்னை நகரம் ஒரு முக்கிய வர்த்தக நகரமாக வளரத்தொடங்கியது. இன்றுவரை சென்னை தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது.

கோலிவுட் என்றழைக்கப்படும் தமிழ் திரை உலகின் தாய்வீடும் சென்னை தான். இந்நிலையில் பெருந்தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு பெரிய அளவில் கொண்டாட்டங்கள் இல்லாமல் இன்று சென்னை தினம் கொண்டாப்பட்டு வருகின்றது.

Related posts