TamilSaaga

“இந்திய பெருங்கடல் Dipole” – சிங்கப்பூர் வானிலையில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் – அறிஞர்கள் சொல்வதென்ன? முழு விவரம்

இந்திய பெருங்கடலில் உருவாகும் Dipole என்ற வானியல் மாற்றம் காரணமாக எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு சிங்கப்பூரில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய பெருங்கடலில் நிகழும் இந்த நிகழ்வால் சிங்கப்பூரின் பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த Dipole மூன்று கட்டங்களில் உருவாகும். நடுநிலை, நேர்மறை மற்றும் எதிர்மறை என்பதே அந்த மூன்று நிலை.

இம்மூன்று நிலை குறித்து விரிவாக காணலாம்.

இந்த நடுநிலை கட்டத்தில், இந்தியப் பெருங்கடல் படுகையின் மேற்கு முனையிலிருந்து கிழக்கு நோக்கி காற்று வீசுகிறது. இவை சிங்கப்பூர் மற்றும் அதன் கடல் கண்டத்தைச் சுற்றி சூடான நீரைத் தேக்குகிறது. அதேபோல எதிர்மறை கட்டத்தில், இந்தியப் பெருங்கடலின் கிழக்கு முனையை நோக்கி வீசும் காற்று தீவிரமடைகிறது. இது வெப்பமண்டல இந்தியப் பெருங்கடலில், வெப்பநிலை சரிவை அமைக்கிறது. மேற்கில் இயல்பை விட குளிர்ச்சியான நீர் மற்றும் கிழக்கில் இயல்பை விட வெப்பமான நீர் இதனால் உண்டாகிறது.

இந்த வெப்பம் மழை மேகங்களை உருவாக்க ஒரு எரிபொருளாக செயல்படுகிறது. மேலும் இது நமது சிங்கப்பூரில் வழக்கத்தை விட அதிக மழையை பெய்ய வழிவகுக்கிறது. சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் வானிலை மற்றும் காலநிலை விஞ்ஞானியும் இணை பேராசிரியர் கோ தியே யோங் வெளியிட்ட அறிக்கையில் “சுமத்ராவின் தென்மேற்கு கடல், வழக்கத்தை விட வெப்பமடையும். இதனால் அதிகரிக்கும் எதிர்மறை IOD, அதீத மழைக்கு காரணமாகிறது.

இதனால் இங்கு வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவை நாம் எதிர்கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டார். MSS எனப்படும் Meteorological Service Singapore வெளியிட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில், கடந்த 1991ம் ஆண்டுக்கு பிறகு மிகவும் ஈரப்பதம் வாய்ந்த மூன்று பெரிய ஆகஸ்ட் மாதங்களில் இந்த மாதம் ஒன்று என்று கூறுகின்றனர். மேலும் இந்த IODயின் positive phase வரும் காலத்தில், சிங்கப்பூர் வழக்கத்தை விட வறண்ட வானிலையை எதிர்கொள்ளும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts