TamilSaaga

மின்தூக்கியில் சிக்கிய தொழிலாளி – விரைந்து செயல்பட்ட சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப்படை

சிங்கப்பூரில் மின்தூக்கிக்கு இடையில் சிக்கி காயமடைந்த தொழிலாளியை சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் இன்று போராடி மீட்டுள்ளனர். இன்று சனிக்கிழமை மாலை 4.20 மணியளவில் 290 ஆர்ச்சர்ட் சாலையில் இருந்து தங்களுக்கு விபத்து குறித்த அறிவிப்பு வந்ததாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை தெரிவித்தது.

சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வந்தபோது, தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் மின்தூக்கியின் அடியில் சிக்கியிருந்தார். ஏணியின் மூலம் அந்த தொழிலாளியை அடைந்த பாதுகாப்பு வீரர்கள் அவரை விரைந்து மீட்டனர். அந்த தொழிலாளிக்கு உடம்பில் வலதுபக்கத்தில் காயங்கள் ஏற்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Stretcher மூலம் பத்திரமாக மேலே கொண்டுவரப்பட்ட அந்த தொழிலாளி உடனடியாக அருகில் இருந்த டன் டாக் செங் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டார்.

Related posts