TamilSaaga

இனிக்க இனிக்க பேசிய ஏஜென்ட்… லட்சத்தினை வாங்கி அல்வா கொடுத்த சம்பவங்கள்… மொத்த காசை வாங்க இதான் ஒரே வழி! போராடினால் தான் முடியும்!

சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல முடிவு எடுத்தவுடன் பலர் போடும் லிஸ்ட்டில் முதல் இடம் பிடிக்கும் நாடுகளில் சிங்கப்பூர் தான் பெரிய பங்கு வகிக்கும். அதற்கு காரணம் சிங்கப்பூரில் தமிழ் பேசும் மக்கள் நிறைய பேர் உண்டு. மேலும் இங்கு உங்களால் தமிழ்நாடு போன்ற உணர்வினை பெற முடியும். இதனாலே பலரும் வேலைக்காக தினமும் தைரியமாக வந்து இறங்குகின்றனர். அந்த வகையில் வரும் பலருக்கு வாழ்க்கை இன்றளவும் நன்றாக தான் சென்று கொண்டு இருக்கிறது.

ஆனால் சிலருக்கு இந்த ஆசை பூக்கும் முன்னரே மண்ணை போட்டு மூடியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதிலும் முக்கியமாக ஏஜென்ட் செய்யும் தகுடுத்தத்தம் அவர்கள் வாழ்வினையே சூனியமாக மாற்றியும் விடுகிறது. ஒரு பாஸுக்கு எக்கசக்க தொகையை கேட்டு சரி சம்பளம் நன்றாக சொல்கிறார்களே என்ற நம்பிக்கையில் வேலைக்கு கிடைக்கும் ஆசையில் லட்சகணக்கில் காசை கொடுப்பார்கள். ஆனால் கடைசியில் சம்பளம் வராது. கடன் தான் வரும். ஏஜென்ட் கம்பியை நீட்டி எஸ்கேப் ஆகிவிடுவார். சிலரோ இந்தோ அந்தோ என இழுத்து கொண்டு இருப்பார்கள்.

இதையும் படிங்க: இந்திய லைசன்ஸ் இருக்கா? அப்போ இந்த துறையில் டிரைவர் வேலை கிடைக்கும்? தரமான சம்பளம்.. சிங்கப்பூரில் லைசன்ஸ் எடுக்க தேவையில்லை!

இப்படி உங்களிடம் இருந்து லட்சக்கணக்கில் வாங்கி ஏமாற்றிய ஏஜென்ட்டிடம் இருந்து காசை லீகலாக வாங்க என்ன வழி என்பதை குறித்து தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். முதலில் பலருக்கு இந்த பிரச்னையை சட்டரீதியாக கொண்டு செல்லவே யோசனை வருவதில்லை. அந்த குழப்பத்தை முதலில் விடுங்கள்.

இப்படி ஒரு பிரச்னை இருக்கும் போது ஆன்லைனில் காவல்துறைக்கென உள்ள இணைய பக்கத்தில் ஒரு புகாரை தைரியமாக பதிவு செய்யுங்கள். இதை தொடர்ந்து அதிகபட்சமாக புகார் பதிவு செய்த அடுத்த இரண்டு நாட்களுக்குள் நீங்கள் கொடுத்து இருந்த தொலைப்பேசி எண்ணுக்கு காவல்துறை அதிகாரி கால் செய்து விபரங்களை விசாரிப்பார். இதை தொடர்ந்து நீங்கள் புகார் கொடுத்து இருக்கும் ஏஜென்ட்டினை விசாரிப்பார். உங்களிடம் இருக்கும் ஆதாரத்தினை பொறுத்து FIR உடனே போடப்பட்டு விடும். இதற்காக முன்னெச்செரிக்கையாக ஏஜென்ட்டிடம் காசு கொடுக்கும் போது பில் வாங்கி வைத்து கொள்ளுங்கள். மேலும் எப்போதுமே காசாக கொடுக்காமல் டிஜிட்டல் ட்ரான்பர் செய்வதை வழக்கமாக வைத்திருந்தால் உங்களுக்கு பாதுகாப்பானது.

இதையும் படிங்க: சிங்கப்பூர் நிறுவனமான டெலாய்ட்… 3000 Vacancy… குறிப்பிட்ட துறைக்கு ஆட்சேர்ப்பு மும்முரம்… எந்த டிகிரி வைத்திருந்தாலும் அப்ளே செய்யலாமாம்!

ஆனால் உங்கள் புகார் விசாரிக்கப்படாமல் கிடப்பில் இருப்பதாக நீங்கள் நினைத்தால் அருகில் உள்ள நீதிமன்றத்தில் புகாரை FIRஆக மாற்றக்கோரி மனு போடுங்கள். அதற்கு 3000ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை செலவுகள் வரும். நீங்கள் நியமிக்கும் வக்கீலும் 5ஆயிரம் வரை கேட்பார்கள். இதுவே 10 ஆயிரம் வரை வரும். இதுவே நீங்கள் 4 லட்சத்திற்கு மேல் கொடுத்து ஏமாந்து இருந்தால் உங்கள் பகுதிக்கான High Court-ல் கூட மனு போடலாம். இதற்கு செலவாக 20000 ரூபாயிற்கும் மேல் வரும் எனக் கூறப்படுகிறது. இதில் வக்கீலுக்கான கட்டணம் சேர்க்கப்படவில்லை.

இந்த புகார் FIRஆக மாறிவிட்டால் உங்க பிரச்னை பாதி ஓய்ந்து பணம் 60 சதவீதம் வரை கிடைத்து விடும் என்று நம்பலாம். மேலும், வழக்காக மாறும் முதல் வாய்தாவிலேயே முன் ஜாமீன் மனுவிற்கும் ஏஜென்ட்டுக்கு தடை வாங்குவதும் முக்கியமாக கருதப்படுகிறது. இது எதற்கு எனக் கேட்டால் அப்படி முன் ஜாமீன் அவர்கள் தரப்பில் கேட்கும் போது உங்கள் பணத்தில் ஒரு தொகையை செட்டில் செய்ய சொல்லவும் வாய்ப்பு உண்டு. ஆனால் இது வாய்தாக்கள் சென்று சில ஆண்டுகள் கூட சில வழக்குகளை பலர் இழுத்தடுக்கவும் வாய்ப்பு உண்டு. ஆனால் பணம் கிடைக்கும்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் 3 நாட்கள் வேலை… பலமான விடுமுறை… பக்காவா $2000 சம்பளம்… அட என்னப்பா வேல அதுனு கேக்குறீங்களா?

நம்ம பணம் என்றாலும் வாங்கவும் செலவுகள் இருக்கும் என்று தான் கூறப்படுகிறது. இதில் சிக்கலில் மாட்டிக்கொள்ள விரும்பாத ஏஜெண்ட் சிலர் மொத்த பணத்தினை செட்டில் செய்யவும் வாய்ப்பு உண்டு. சட்டம் கண்டிப்பாக உங்கள் பிரச்னை தீர்க்கும் என்ற நம்பிக்கையில் முன் எடுத்தால் தான் முடிவுகள் கிடைக்கும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts