TamilSaaga

மீன்பிடி சந்தைகள்.. பரவிய தொற்று – அனைத்து தொழிலாளர்களுக்கும் கட்டாய பரிசோதனை

அனைத்து மீன்பிடி சந்தைகளிலும் உள்ள மீன் பிடிப்பவர்களுக்கு கட்டாய கொரோனா சோதனை செய்யப்படும் என்று சுகாதார அமைச்சகம் இன்று (ஜூலை 17) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளத்து. மேலும் அனைத்து சந்தைகளுக்கும் சுய கொரோனா பரிசோதனை கருவி வழங்கப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜுராங் ஃபிஷர் துறைமுகத்தில் தனிநபர்களிடையே பரவிய 7 கோவிட் -19 நோய்த்தொற்றுகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது நினைவுகூரத்தக்கது. மேலும் வரும் ஜூலை 31ம் தேதி வரை ஜுராங் ஃபிஷர் துறைமுகம், தூய்மைப்படுத்தும் பணிக்காக மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

MOH அறிவுறுத்தலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூலை 3 முதல் ஜூலை 16 வரை ஜுராங் மீன்வள துறைமுகத்தில் பணிபுரிந்த அனைவரும் ஏற்கனவே தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த காலகட்டத்தில் துறைமுகத்திற்கு வந்த அனைத்து பார்வையாளர்களுக்கும் சிறப்பு சோதனை நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

ஏற்கனவே ஜுராங் மீன்வள துறைமுகத்திலிருந்து ஹாங் லிம் சந்தை வரை தொற்று பரவியுள்ளது. மேலும் வைரஸ் மற்ற சந்தைகளுக்கு பரவும் அபாயமும் தற்போது உள்ளது என்று MOH எச்சரித்துள்ளது.

Related posts