TamilSaaga

Exclusive : “என் மகனை இன்னும் தொட்டுகூட பார்க்கல.. குற்ற உணர்ச்சி என்னை குத்துது” – சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழக தொழிலாளியின் வேதனை!

ஒரு ஆண் தனது வாழ்க்கை பயணத்தில் அழுவது குறைவு என்று பலர் நினைத்துக்கொண்டிருக்க, அவன் சிந்தும் கண்ணீர் அவனுக்கு மட்டுமே தெரியும் என்பதே நிதர்சனமான உண்மை. அதிலும் குறிப்பாக தாய் மண்ணை விட்டு பிற நாடுகளுக்கு சென்று குடும்பத்திற்காக உழைக்கும் ஆண்களின் கண்ணீர் வாழ்க்கையை சொல்ல வார்த்தையில்லை. இன்று (மார்ச் 24) தனது மகனுக்கு பிறந்தநாள் ஆனால் அவன் பிறந்தலிருந்து ஒரு முறை கூட அவனை இன்னும் தொட்டுப்பார்க்கவில்லை, குற்ற உணர்ச்சி என்னை குத்துகிறது என்கிறார் நமது தமிழ் சாகா சிங்கப்பூர் தளத்திற்கு பிரத்தியேக பேட்டியளித்த சிங்கப்பூர் வாழ் தமிழக தொழிலாளர் பொண்ணுவேலு சிவசத்தியான்.

“8.25 கோடி ரூபாய் பந்தயக் குதிரை”.. சிங்கப்பூரின் நம்பிக்கையை காப்பாற்றுவாரா டிம் டேவிட்? மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் ஏன் “முக்கியம்”?

நமது சிங்கப்பூரில் வேலைசெய்து வரும் வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை நமது தமிழ் சாகா மூலம் தெரிவித்து வருகின்றோம். அப்படி தன் மகனுக்கு வாழ்த்து தெரிவிக்க நம்மை அணுகியவர் தான் சத்தியன். உடனே நமது குழு அவரை தொடர்புகொண்டபோது அவர் கூறிய முதல் வார்த்தை நன்றி.. நன்றி.. நன்றி.. என்பது மட்டுமே. அவர் குரலில் குடும்பத்தை குறிப்பாக தனது பிரிந்து வாழும் அந்த ஏக்கம் தெரிந்தது.

“எனக்கு சொந்த ஊர் பாண்டிச்சேரி அருகே உள்ள வீராம்பட்டினம், ஒரு மீனவ கிராமம். 2019ம் ஆண்டு சிங்கப்பூரில் வேலைக்கு வந்தேன். ஆனால் மனைவிக்கு டெலிவரி நேரத்துல என்னால அங்க திரும்ப போகமுடியாத சூழ்நிலை. Lock Down போட்டாங்க, இன்னைக்கு என் பையனுக்கு Birthday ஆனால் அவனை இன்னும் நான் அவனை தொட்டுகூட பார்த்தது இல்லை அந்த குற்றவுணர்ச்சி இருக்கு” என்றார் கணத்தகுரலுடன். வேலை நேரத்தில் அலைபேசி பயன்படுத்த முடியாது, வீட்டிற்கும் இரவு நேரத்தில் 30 நிமிடங்கள் பேசுவேன் அவ்வளவு தான்.

சிங்கப்பூரில் கத்தியை வைத்து பூச்சாண்டி காட்டிய நபர்.. கெஞ்சியும், மிரட்டியும் கேட்காமல் “அழிச்சாட்டியம்” – வேறுவழியின்றி போலீசார் சுட இப்போது கல்லறையில்!

“வருகின்ற செப்டம்பர் மாதத்தோடு மூன்று ஆண்டு நிறைவடைய போகிறது, கஷ்டங்களை அனுபவிக்கிறேன். அப்போது அவனை பார்க்கப்போகிறேன் என்று தெரியவில்லை. ஆனால் இந்த சூழலில் உங்களுடைய ஆறுதலான அந்த பேச்சுகளுக்கு நன்றி” என்று கூறி முடித்தார் சத்தியன். உண்மையில் சத்தியன் போன்ற தொழிலாளர்களின் வாழ்க்கையை பார்க்கும்போது தான் இந்த தொற்றின் மீதுள்ள கோவம் கோடி மடங்காக உயர்கிறது. பெற்ற பிள்ளையை என்னதான் போன் மூலன் பார்த்தாலும் அந்த சிசுவை தொட்டு அரவணைத்து அவன் மூச்சுக்காற்றை சுவாசிக்காத வாழக்கை கொடுமையே.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts