TamilSaaga

24 மாணவர்களுக்கு மத்தியில் தனி ஆளாய் நின்று.. தன் “என்ஜினியரிங்” கனவை விடாமல் துரத்தி சாதித்த சிங்கப்பூர் பெண்

படிப்புக்கு பாலினம் கிடையாது, அதேபோல ஏர் கலப்பையோ இல்லை Aeroplaneனோ எந்த தொழிலாளாக இருந்தாலும் ஆண்களுக்கு எப்போதும் பெண்கள் நிகராகத்தான் சாதித்து வருகின்றனர். உலக அளவில் படிப்பில் ஆண்களைக்காட்டிலும் பெண்களே படு கெட்டி. இதேபோலத்தான் சிங்கப்பூரில் 26 வயதான பினிதா சாஹாவுக்கு, சிறுமியாக இருந்ததில் இருந்தே Engineering துறை மேல் அதீத ஆசை. அந்த பெண்ணின் தந்தை ஒரு எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர். Fabrication Labல் வேலை பார்ப்பது மற்றும் PPE உடைகளை அணிந்து வேலை செய்வது போன்ற தன் தந்தையின் கதைகளைக் கேட்டுத்தான் அவர் வளர்ந்து வந்துள்ளார். இதுவே அவரை காலப்போக்கில் Engineering துறைமீதான ஆர்வத்தை தூண்டியது.

“என் சாபம் சும்மா விடாதுடா பாவிகளா” – சிங்கப்பூரில் எட்டு ஆண்டுகால வாழ்க்கையை நிறைவு செய்த தமிழக ஊழியரின் புலம்பல்

தனது O-Level படிப்புக்கு பிறகு, Engineering துறை குறித்து மேலும் அறிந்துகொள்ள பாலிடெக்னிக் படிப்பு என்ற பாதை தனக்கு சிறந்த வழியாக அமையும் என்று நினைத்த பினிதா, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிக்க சிங்கப்பூர் பாலிடெக்னிக்கிற்கு (SP) விண்ணப்பித்தார். Engineering படிப்பில் ஆர்வம் இருந்தபோதும் செயின்ட் மார்கரெட்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து வந்த அவருக்கு SP-யில் தனது வகுப்பில் 24 ஆண்களுக்கு மத்தியில் ஒரே பெண்ணாக அமர்ந்திருந்தது ஒரு பெரிய ஷாக்காகத் தான் இருந்தது.

ஒரு சமமற்ற பாலின விகிதங்கள் எனது வகுப்பில் இருந்தபோதிலும், தனக்கு ஒருபோதும் அது ஒரு சங்கடமாக இருந்தே இல்லை என்று கூறினார் சாஹா. பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் ஒருபோதும் என்னிடம் பாரபட்சம் காட்டியதில்லை என்றும் அவர் கூறினார். ஆசிரியர்களோ அல்லது என் சக மாணவர்களோ தான் ஒரு பெண் என்பதால் என்னை வித்யாசமாக நடத்தியது இல்லை என்றார். எனது சக ஆண் மாணவர்கள் அவ்வப்போது என்னிடம் வந்து பேசுவது, மதிய உணவுக்கு ஒன்றாக அமர்ந்து உணவு உண்பது மற்றும் நான் சௌகர்யமாக உணர்கிறேனா என்பதை உறுதிசெய்வது என்று என்னிடம் அன்பாக பழகினார்கள்.

SPல் அவருக்கு கிடைத்த அந்த அனுபவம் படிப்பின் மீது இருந்த ஆர்வத்தை இன்னும் அதிகரித்தது, இறுதியில் அதுவே அவரை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU) இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடர உதவியது. ஆனால் அங்கு பாலின விகிதம், அதிர்ஷ்டவசமாக மிகவும் சீரானதாக இருப்பதைக் கண்டறிந்தார் அந்த பெண். கடந்த 2019ல் NTUல் பட்டம் பெற்ற பிறகு, சாஹா தனது படிப்பைத் தொடர நினைத்தார், ஆனால் அவர் முதலில் இன்னும் சில Practical அனுபவத்தைப் பெற விரும்பிய நிலையில் எந்த நிறுவனத்தில் தனது முதல் பணியை துவங்கலாம் என்ற மிகப்பெரிய கேள்வி அவர் முன் எழுந்தது.

எந்த நிறுவனத்திற்க்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது, ​​மைக்ரான் டெக்னாலஜி என்ற Semi conductors தயாரிப்பு நிறுவனம் தான் அவர் மனதில் உதித்த முதல் Choice. பெரும் கனவோடு அந்த நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த அவர் அந்நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு, அங்கு தனது நேரத்தை பயனுள்ளதாக கழித்ததை உணர்ந்துள்ளார்.

மேலும் பல வழிகளில் தனது வெவ்வேறு ஆர்வங்களை ஆராய அந்த வேலை தனக்கு உதவியதையும் அவர் உணர்ந்தார். தற்போது Non-Volatile Memory Quality Reliability and Assurance Engineer என்ற பதவியில் உள்ளார் அவர். தான் பணி செய்யும் நிறுவனம், அவர்கள் உருவாக்கும் தயாரிப்புகள் நல்ல தரம் வாய்ந்தவை என்பதை உறுதிப்படுத்தும் பணி அது.

இதுதான் “அல்டிமேட் Update” : அனைத்து இந்திய நகரங்களுக்கும் VTL விரிவுபடுத்தப்படுகிறது – சிங்கப்பூர் CAAS அளித்த “Green Signal”

தற்போது அந்த பாலின பாகுபாடு அவருக்கு அறவே மறந்துவிட்டதாம், ஏன் என்றால் அந்த நிறுவனத்தில் பல பெண்கள் உள்ளனர். குறிப்பாக அவர்களுடைய மேலாளரே ஒரு பெண்தான். சஹா தனது ஓய்வு நேரத்தில், பாலிவுட் நடனம் கற்றுக்கொள்கிறாராம். மற்றும் தனது சொந்த சிறிய ஆன்லைன் ஃபேஷன் வணிகத்தையும் நடத்தி வருகின்றார். சாஹா வேலை பார்த்துவரும் மைக்ரான் நிறுவனத்திற்குள் ஒரு நடனக் குழுவைத் தொடங்கியுள்ளார். மைக்ரானில் அவர்களுடைய நடனத்தை ரசித்த சில நண்பர்களுடன் சேர்ந்து, பல நிறுவன நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றார் அவர். தான் ஆசைப்பட்டதை இன்று நிஜத்தில் செய்து சாதனை செய்த அற்புத மங்கையாக அவர் வலம்வருகிறார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts