TamilSaaga

“பிரான்ஸ் நாட்டின் 5 பகுதிகள்” – அம்பர் நிற எச்சரிக்கை பிரகடனம் : மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்

தென் ஆப்பிரிக்க நாட்டில் இருந்து பரவியதாகக் கருதப்படும் “பீட்டா” வகை வைரஸ் தற்போது பிரான்ஸ் நாட்டில் அதிக அளவில் பரவி வருகின்றது. இதனால் பிரான்சின் பல்வேறு இடங்களில் பொது நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கூடுதலாக பிரான்ஸின் தென் கிழக்கில் உள்ள அப்லெஸ்-மாரிடைம்ஸ், Var, Drôme, Alpes-de-Haute-Provence மற்றும் Ardèche உள்ளிட்ட ஐந்து பகுதிகளுக்கு அதிக வெப்பம் தொடர்பாக அம்பர் நிற எச்சரிக்கை தற்பொழுது விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஐந்து பகுதிகளில் வெப்பநிலை 36 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை எட்டும் என்றும். மேலும் ஞாயிற்றுக்கிழமை முதல் வெப்பநிலையை குறைய வாய்ப்புகள் உள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மேற்குறிப்பிடப்பட்ட இந்த ஐந்து பகுதிகளில் வாழ்கின்ற குழந்தைகள் சிறு பிள்ளைகள் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்கள் தங்கள் உடல் நலத்தை கவனமாக பாதுகாத்துக்கொள்ளுமாறும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மற்றும் மக்கள் அதிக அளவில் தண்ணீர் குடிப்பதன் மூலமும், வெளியே செல்லாமல் இருப்பதன்முலமும் பிரச்சனைகளை தவிர்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

Related posts