TamilSaaga

வைரலாகும் சிங்கப்பூர் ரயில்… குடியிருப்பை க்ராஸ் செய்யும் போது உருவாகும் Mist… ஆனால் இந்த ரயிலில் இருக்கும் இன்னொரு ஸ்பெஷல் தெரியுமா?

சிங்கப்பூர் எப்போதுமே மாடர்ன் வாழ்க்கையை ஈசியாக முன்னேறிக்கொண்டே செல்லும் என்பதற்கு சமீபத்திய ஒரு செய்தி எடுத்துக்காட்டாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வந்தது. சிங்கப்பூரின் மெட்ரோ ரயில்கள் குடியிருப்பு பகுதியினை க்ராஸ் செய்யும் போது வெள்ளையாக மாறி மறைத்து விடுவது தான் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.

சிங்கப்பூரின் புக்கிட் பஞ்சாங் லைட் ரெயில் டிரான்சிட் (எல்ஆர்டி) ரயில் தான் சிங்கப்பூரின் முதல் லைட் ரயில் என நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த ரயில்களின் ஸ்மார்ட் வெள்ளை கண்ணாடி ஜன்னல்கள் இணையத்தில் ஏற்கனவே வைரலானது தான்.

இதையும் படிங்க: நர்ஸிங் படிச்சிருக்கீங்களா அப்போ உங்களுக்கு தான் சிங்கப்பூர் பட்டுக்கம்பளம் விரிக்கும்… சீக்கிரம் அப்ளே செய்யுங்க.. 1 லட்சம் வரை சம்பளம் கிடைக்குமாம்!

இதுமட்டுமல்லாமல் வெள்ளை கண்ணாடியுடன் சத்தமும் மிக குறைவாக இருக்கும் என்கிறது ரயில் நிர்வாகம். இது எல்ஆர்டி லைனை ஒட்டி வசிக்கும் குடியிருப்பாளர்களின் உரிமையை பாதுகாக்க இந்த புதுமையான அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டதாக SGTrainsதெரிவித்துள்ளது.

SGTrains கூறியது, இந்த ரயில்கள் ஒரு பிரத்யேக உயரமான பாதையில் இயங்குகின்றன. சாலை மற்றும் நடைமேடையில் நடக்கும் மக்களுக்கும், வாகன ஓட்டிகளின் போக்குவரத்திற்கு இடையூறு இருக்காது. மேலும் சாதாரண இரும்பு சக்கரம் கொண்ட ரயில்களுடன் ஒப்பிடும்போது, ​​இந்த APM ரயில்களில் ரப்பர் டயர்களுடன் பொருத்தப்பட்டிருப்பதால் இயக்கத்தின் போது சத்தம் பெரிதாக இருக்காது.

இந்த புது முயற்சிக்கு நெட்டிசன்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். மக்களின் தனியுரிமைக்கு பாதுகாப்புகளை மற்றும் ரயில் லைனுக்கு அருகில் இருக்கும் குடியிருப்பாளர்களுக்கு ஒரு நல்ல இரவு தூக்கத்தைப் பெற உதவுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts