TamilSaaga

தன் Selfie புகைப்படங்களை விற்று 7 கோடி சம்பாதித்த மாணவன்! – நமக்கு தான் பிழைக்க தெரியலயோ?

இந்த டிஜிட்டல் யுகத்தில் என்ன நடந்தாலும் அதில் ஆச்சர்யப்பட எதுவுமே இல்லை என்றே கூறலாம். Khaby lame என்ற இந்த பெயரை நிச்சயம் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் மேற்கு ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள Senegalese என்ற இடத்தை சேர்ந்தவர் தான் இவர். பெருந்தொற்று காலத்தில் வேலை போனதால் Tik Tok செய்யத்துவங்கினர். தற்போது 100 மில்லியனுக்கும் அதிகமான Tik Tok followers கொண்டுள்ளார் Khaby, சரி Tik Tok Followers வைத்து என்ன செய்யப்போறாரு என்று நீங்கள் கேள்விகேட்பது முறையே. ஆனால் இவர் போட்ட வீடியோ மூலம் இவர் சம்பாரித்த தொகை என்ன தெரியுமா? கடந்த 2021ல் இவருடைய “நெட் ஒர்த்” 2 மில்லியன் அமெரிக்க டாலர்.

இதையும் படியுங்கள் : போலீசை கொன்ற கைதி.. தனிமையில் சந்தித்து முத்தம் தந்த பெண் நீதிபதி : வெளியான CCTV காட்சி

சரி நம்ம Khaby கூட வீடியோ போட்டு தான் சம்பாரித்தார் ஆனால் இந்தோனேசி நாட்டை சேர்ந்த ஒருவர் இவரையும் மிஞ்சிவிட்டார். இந்தோனேசியக் கல்லூரி மாணவர் ஒருவர் தனது 1,000 செல்ஃபிக்களை Open Sea என்ற இணையதளத்தில் விற்று அதன் மூலம் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாரித்துள்ளார். 22 வயதான சுல்தான் குஸ்டாஃப் அல் கோசாலி இந்தோனேசியாவின் செமராங்கில் உள்ள பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் முடித்தவர். சுமார் நான்கு ஆண்டுகளாக அதாவது 2017 முதல் 2021 வரை, கோசாலி தனது பட்டப்படிப்பு நாளுக்கான Time-Lapse வீடியோவை உருவாக்க, காட்சிகளைத் தொகுக்கும் நோக்கத்துடன், கம்ப்யூட்டர் முன் நிற்கும் போது, ​​தனது Expression இல்லாத முகத்தின் புகைப்படத்தை தினமும் எடுத்துள்ளார்.

இதனையடுத்து 2021 டிசம்பரில், பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பற்றி அறிந்த பிறகு, “Ghozali Everday” என்ற தலைப்பில் தனது செல்ஃபிகளை OpenSea-ல் பதிவேற்ற முடிவு செய்தார். மேலும் அவற்றின் விலை ஒவ்வொன்றும் S$3 என அவர் நிர்ணயித்ததாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்தது. இது ஒரு வேடிக்கை விஷயமாக அவர் செய்ய எண்ணி மட்டுமே அனைத்தையும் Upload செய்துள்ளார். இந்நிலையில் அவர் நினைக்காத ஒரு நிகழ்ச்சி நடந்தது.

இதையும் படியுங்கள் : பழ லாரினு நினைத்து சோதனை செய்த சிங்கப்பூர் ICA அதிகாரிகள் : ஆனா சிக்கியது வேற பொருள்

அவருடைய ஒரு செல்ஃபி 0.247 கிரிப்டோகரன்சி Ether-க்கு விற்கப்பட்டது, ஜனவரி 14ம் தேதி அன்று அந்த cryptocurrencyயின் விலை சுமார் US$806. இறுதியில் Ghozaliன் சேகரிப்பு பின்னர் 317 Ether என்ற வர்த்தக அளவை எட்டியது, இதனுடைய மதிப்பு சுமார் US$1 மில்லியனுக்கும் அதிகமாகும். அடுத்த சில ஆண்டுகளுக்கு தான் இதுபோன்ற Selfieகளை எடுக்கமாட்டேன் என்றும். சேகரிப்பாளர்கள் அவரது புகைப்படங்களை அவர்கள் விரும்பும் வண்ணம் உபயோகிக்கலாம் என்றும் கூறியுள்ளார். அதே நேரத்தில் “தயவுசெய்து எனது புகைப்படங்களை தவறாக பயன்படுத்த வேண்டாம் அது என் பெற்றோர்களை மிகவும் காயப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

இந்த பணத்தை கொண்டு அவருடைய கனவான ஒரு அனிமேஷன் ஸ்டூடியோ உருவாக்க முதலீடு செய்யவிருப்பதாக கூறியுள்ளார் அவர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts