TamilSaaga

எல்லை மீறிய பார்ட்டி… சிங்கப்பூரில் 19 வயது சிறுவனை… தனது சிறுநீரை குடிக்க வைத்து டார்ச்சர் செய்த 20 வயது இளம்பெண்!

SINGAPORE: சிங்கப்பூரில் Putri Nuramira Aishah Rosli என்ற 20 வயது இளம்பெண் தற்போது சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கடுமையான தண்டனை (பயிற்சிகள்) வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்படி இவர் செய்த தவறு என்ன? இதற்காக இந்த வயதில் இப்படியொரு தண்டனை? என்று இங்கே பார்க்கலாம்.

சிங்கப்பூரில் 19 வயது சிறுவன் ஒருவர் ஒரு கேங்குடன் இணைந்து பார்ட்டிக்கு சென்றிருக்கிறார். அந்த கேங்கில் Putri Nuramira Aishah Rosli என்ற பெண்ணும், Muhammad Shahfakhry Mohamad Faizal என்ற 21 வயதுள்ள இரு இளைஞர்களும், வேறு 2 பெண்களும் என மொத்தம் 5 பேர் இருந்திருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட இந்த 19 வயது சிறுவனுக்கு இயற்கையாகவே நுண்ணறிவு திறன் குறைபாடு இருந்துள்ளது. அதாவது IQ குறைவாக இருந்துள்ளது. அவர் ஏபிஎஸ்என் டெல்டா சீனியர் பள்ளியில் தான் படித்து வந்தார், இது லேசான அறிவுசார் குறைபாடுள்ள மாணவர்களுக்கானது.

இந்நிலையில், அந்த பார்ட்டியில் இளம்பெண் Putri தவிர, மற்ற அனைவரையும் அந்த சிறுவனுக்கு பரிச்சயமானவர்களே. இந்த சூழலில், கடந்த ஜனவரி மாதம் 15ம் தேதி இளம்பெண் Putri-யும் மற்றவர்களும் போதைப்பொருள் சாப்பிட ஹோட்டல் அறையில் சந்தித்தனர்.

பிறகு போதைப்பொருள் சாப்பிட்டுக் கொண்டே பேசிய போது, ‘என்னிடம் அந்த சிறுவனுக்கு செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்புகிறான்’ என்று Putri அந்த பார்ட்டியில் கலந்து கொண்ட சக ஆண் நண்பரான Shahfakhry-யிடம் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த Shahfakhry, அந்த சிறுவனை தாக்கியுள்ளார். பிறகு A1 குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட Putri-யும் அந்த நபருடன் சேர்ந்து சிறுவனுக்கு தாக்கியுள்ளார்.

மேலும் படிக்க – சோறு தண்ணீர் இல்ல.. ஒட்டகம் மேய்க்க சொல்றாங்க – குவைத்தில் வேலைக்குச் சென்ற தமிழர் சுட்டுக் கொலை!

ஜனவரி 17 முதல் 25 வரை அந்தக் குழு சிறுவனைத் தொடர்ந்து நாசம் செய்திருக்கிறது. அப்போது, அந்த பெண்களில் ஒருவர் குளிர்ந்த lemon tea இருந்த பாட்டிலில் சிறுநீர் கழித்து அதனை அந்த சிறுவனை குடிக்க கட்டாயப்படுத்தியிருக்கிறார். அனைவரும் சேர்ந்து மிரட்ட சிறுவன் அந்த சிறுநீரை குடித்துள்ளார்.

இவர்கள் அனைவருக்கும் ஒரு பாஸ் போன்று செயல்பட்ட இளம்பெண் putri, அந்த சிறுவனை அடித்து உதைத்து, அறைந்து, குப்பைத்தொட்டி மற்றும் air freshener-ஸ் கொண்டு அடித்து சரமாரியாக துன்புறுத்தி இருக்கிறார்.

razor blade கொண்டு அந்த சிறுவனின் கைகளை அறுத்து ரணப்படுத்தி இருக்கிறார். ஜன.25ம் தேதி கிட்டத்தட்ட மரண தருவாய்க்கு அந்த சிறுவன் சென்ற பிறகே, கொடுமைப்படுத்துவதை அந்த கேங் நிறுத்தி இருக்கிறது.

அதே நாளில், அந்த சிறுவனின் தங்கை, தனது சகோதரர் இரண்டு வாரங்களாகியும் வீடு திரும்பவில்லை என்று போலீஸில் புகார் அளித்திருக்கிறார். பிறகு, சமூக தளங்களில் பாதிக்கப்பட்ட அந்த சிறுவனின் புகைப்படங்கள் வெளியாக, அதனையும் போலீசாரின் கவனத்துக்கு அவர் கொண்டுச் சென்றுள்ளார்.

இதையடுத்து, Arton Boutique Hotel என்ற ஹோட்டலில் இருந்து சிகரெட் தீப்புண்கள், சதை அறுக்கப்பட்ட காயங்கள், எலும்பு முறிவுகள், தலையில் மோசமான காயங்கள் என்று மிக மிக இக்கட்டான நிலையில் அந்த சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, நடைபெற்ற விசாரணையில் Putri Nuramira Aishah Rosli என்ற 20 வயது இளம்பெண்ணுக்கு 12 மாதங்கள் சீர்திருத்த பள்ளிக்கு வைக்க உத்தரவிடப்பட்டது. அனுப்பப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கடுமையான தண்டனை (பயிற்சிகள்) வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்பளித்த மாவட்ட நீதிபதி ஷைஃபுதின் சருவான், “அப்பெண் செய்த குற்றங்கள் கடுமையானவை” என்றார். மேலும், “நீங்களும் உங்கள் நண்பர்களும் செய்த செயலால் ஒரு நபர் பலத்த காயம் அடைந்துள்ளார்… உங்கள் இளம் வயதைக் கருத்தில் கொண்டு, மறுவாழ்வு சாத்தியம் என்று நான் நம்புகிறேன். ஆனால் அந்த மறுவாழ்வு ஒரு கட்டமைக்கப்பட்ட கடுமையான சூழலில் தான் உங்களுக்கு வழங்கப்படும். அதனை நீங்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts