இந்தியாவில் உள்ள தனது குடும்பத்திற்காக வெளிநாட்டு வாழ்க்கையை சகித்துக் கொண்டு சிங்கப்பூரில் வாழும் இளைஞர்கள் ஏராளம். குடும்பத்திற்கு ஒரு மாதம் பணம் அனுப்புவதற்கு பின்னால் அவர்கள் படும் கஷ்டத்தினை சொல்லி மாளாது. இதைப் பற்றி ஏற்கனவே பல பதிவுகளில் நாம் கூறி இருந்தாலும் இன்று இதனை உண்மை என்று உரக்கச் சொல்லும் அளவிற்கு சிங்கப்பூரின் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அதாவது சிங்கப்பூரில் வேலை பார்க்கும் மக்கள், வேலை பார்க்கும் இடங்களில் காட்டப்படும் பாகுபாட்டின் காரணமாக பெரும்பளவு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்று புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது.
வேலை இடங்களில் ஏற்படும் சிக்கல்களின் காரணமாக மனநல பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டு காட்டிலும் 2022 ஆம் ஆண்டு அதிகமாகியுள்ளது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மன அழுத்தத்தின் காரணமாக, கவுன்சிலிங் பெற ஏராளமானோர் உதவியை நாடியுள்ளனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு கவுன்சிலிங் பெற விண்ணப்பத்தவர்களின் எண்ணிக்கை 20 சதவீதமாக இருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு அவர்களின் எண்ணிக்கை 35.3 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று தெரியவந்துள்ளது.
3600 சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் அங்கு வசிக்கும் PR மக்களிடையே மேற்கொண்ட ஆய்வில் இந்த புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது. வேலை பார்க்கும் ஊழியர்கள் மட்டுமல்லாமல் வேலை தேடுபவர்களும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறப்படுகின்றது. வேலை பார்ப்பவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் எதிர்கொள்ளும் முதல் பிரச்சினை வயது என்று கூறப்படுகின்றது. வயதின் காரணமாக முதலாளிகள், வேலைக்கு சேர்க்காமல் ஒதுக்கி வைப்பதாக தெரியவந்துள்ளது. இரண்டாவது காரணம் இனம் என்று கூறப்படுகின்றது. வேலை பார்க்கும் இடங்களில் இன பாகுபாடு உள்ளது என்பது பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது.
இந்நிலையில் அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு கவுன்சிலிங் போன்ற முயற்சிகளின் காரணமாக இனிவரும் ஆண்டுகளில் இந்த சம்பவம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.