உலகம் முழுவதிலும் ஜூலை மாதம் அதிக வெப்பநிலை பதிவானதை ஒட்டி ஆகஸ்ட் மாதத்தின் முதல் இரண்டு வாரத்தில் சிங்கப்பூரில் வெப்பம் கடுமையாக இருக்கும் என்று சிங்கப்பூரின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதமே உலகம் முழுவதிலும் இதுவரை பதிவான வெப்பத்தில் அதிகபட்ச வெப்பநிலை என்று வானவியல் நிபுணர்கள் தெரிவித்தனர். ஆகஸ்ட் மாதமாவது சற்று இளைப்பாறலாம் என்று நினைத்தால் ஆகஸ்ட் மாதத்திலும் வெப்பநிலை கடுமையாக இருக்கும் என்றே தெரியவந்துள்ளது.
மேலும் ஒரு சில இடங்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தெற்கு மற்றும் கிழக்கு கடலோர பகுதிகளில் வெப்பநிலை இரவு நேரங்களில் 29 டிகிரி செல்சியஸ்க்கு மேலே இருக்கும் என்று கூறப்படுகின்றது. ஏற்கனவே ஜூலை மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலையான 35.4 டிகிரி செல்சியஸ் பதிவானது குறிப்பிடத்தக்கது. எனவே பொதுமக்கள் அதிக வெப்பநிலை கருதி உடல் நிலையில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.