TamilSaaga

‘சிங்கப்பூரில் 22.5 டிகிரி செல்சியஸ் வரை குறைந்த வானிலை’ – எந்த இடத்தில் அதிக மழை தெரியுமா?

சிங்கப்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 13) காலை புழுக்கமான வானிலை நிலவிய நிலையில் பலத்த மலையில் தான் நம் நாடு கண்விழித்து என்றால் அது மிகையல்ல. காலை 10.45 மணியளவில் வெப்பநிலை 22.5 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் குறிப்பாக ஜனவரி மாதம் 2ம் தேதி வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தது என்பது நினைவுகூரத்தக்கது. சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையத்தின் வலைத்தளத் தகவலின்படி தீவின் வடமேற்கு பகுதிகளான ஆங் மோ கியோ, அப்பர் பியர்ஸ் நீர்த்தேக்கம், புக்கிட் பஞ்சாங் மற்றும் தெங்கா போன்ற இடங்களில் அதிக மழை பெய்துள்ளது.

சிங்கப்பூரில் அதிகபட்சமாக நேற்று நள்ளிரவு வரை புக்கிட் பஞ்சாங் பகுதியில் 114.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பலத்த இடியுடன் கூடிய மழையின் போது சிங்கப்பூரின் யிஷூன் மற்றும் புக்கிட் படோக்கில் பெரிய மரங்களும் வேரோடு சாய்ந்துள்ளது.

இந்நிலையில் பைஷல் இப்ராஹிம் தனது பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், பிளாக் 645 யிஷூன் தெரு 61ல் ஒரு மரம் வேரோடு சாய்ந்தது என்றும். ஆனால் இதனால் எந்தவித பொதுசொத்திற்கும் சேதம் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts