TamilSaaga

சிங்கையில் உள்ள floating ஆப்பிள் ஷோரூம்… படகில் சவாரி செய்து கொண்டே ஷாப்பிங் செய்யலாம்… அட என்னப்பா புதுசா இருக்கே!

உலகில் இருக்கும் எல்லாருக்குமே மொபைல் என்றால் ஆப்பிள் மீது தான் ஆசை வரும். ஒருமுறையாவது ஐபோனை பயன்படுத்த நினைப்பார்கள். அப்படி இருக்கும் போனை வாங்கும் ஷோரூம் கூட ஸ்பெஷலாக இருக்கும் என்றால் நம்ப முடிகிறதா? 24 மணி நேரம் இயங்கும் ஷோரூம், மிதக்கும் ஷோரூம் என விதவிதமாக உலக நாடுகள் பலவற்றிலும் ஐபோன் ஷோரூம் இருக்கிறது.

சிங்கப்பூரில் மிதக்கும் ஷோரூம் அமைக்கப்பட்டு இருக்கிறது. முழுக்க முழுக்க கண்ணாடியில் அமைக்கப்பட்ட அமைப்பில் கீழ் தளத்தில் தண்ணீருக்குள் மிதக்கும் ஷோரூம் இயங்கி வருகிறது. கப்பலில் பயணித்து கொண்டே பல்வேறு வகையான பிராண்ட்களில் ஷாப் செய்யவும் அருகில் வசதிகள் இருக்கிறது. இந்த ஷோரூமுக்குள் இருக்கும் அனைத்து சுவர்களுமே கண்ணாடியால் தான் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புதுப்பிக்கப்பட இருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் Dorms… சுத்தமான தரை… ஆரோக்கியமான கழிப்பறை… இதை செய்தாலே போதுமே? ஏக்கத்தில் ஊழியர்கள்

எஸ்கலேட்டரின் மேற்கூரை கூட கண்ணாடியில் பார்க்கவே பிரமிப்பை கொடுக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஷோரூமில் வாங்கப்படும் ஐபோன் 14 ப்ரோவிலை கிட்டத்தட்ட இந்தியாவினை ஒப்பிட்டு பார்க்கும் போது 23 ஆயிரம் குறைவு தான் எனக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் சமீபத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் ஆப்பிளின் இந்த ஷோரூம் மெரினா பேவில் நீரில் நேரடியாக அமைக்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு துவக்கப்பட்ட இந்த ஷோரூம் சிங்கப்பூரில் மூன்றாவது என்றும், உலகளவில் 512வது என்றும் கூறப்படுகிறது.

இந்தக் கடை Apple Marina Bay Sands என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது கடைகள், உணவகங்கள் மற்றும் மரினா பே சாண்ட்ஸ் ஹோட்டல் மற்றும் கேசினோக்கள் நிறைந்த சிங்கப்பூரின் சொகுசு சிட்டியில் அமைந்துள்ளது. 114 தனித்தனி கண்ணாடித் துண்டுகளிலிருந்து இந்த வடிவம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாதிரியான வடிவத்தில் இந்த வடிவமைப்பு தான் முதல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மாதம் 9 லட்சம் சம்பளமும் வேண்டாம்.. குடியுரிமையும் வேண்டாம்… சிங்கப்பூரில் சொர்க்கமாய் கிடைத்த வாழ்க்கையை தூக்கியெறிந்து விட்டு சொந்த ஊரில் ஆடு, மாடு மேய்க்கும் தம்பதி…!

இந்த வடிவத்தின் உச்சியில் சூரிய ஒளியை அனுமதிக்கும் ஒரு oculus உள்ளது. இது ரோமில் உள்ள பாந்தியனால் ஈர்க்கப்பட்டதாக ஆப்பிள் கூறுகிறது. காட்சிப்படுத்தப்பட்ட அனைத்து வழக்கமான கேஜெட்களுடன் ஒரு கடைத் தளம், மேற்கூரையில் வீடியோ திரை மற்றும் இருக்கை பகுதி உள்ளது. இங்கு ஆப்பிள் தனது கடைகளில் கொடுக்க விரும்பும் பல்வேறு பேச்சுகள் மற்றும் பயிற்சிகளை நடத்துகிறது.

இந்த ஷோரூம் அடியில் நீர் மட்டம் குறைவாகவே இருக்கும். இது first underwater Boardroom என்று ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது. பயிற்சி மற்றும் ஆலோசனையைப் பெற ஆர்வமுள்ள தொழில்முனைவோர் மற்றும் டெவலப்பர்கள் ஆப்பிள் குழு உறுப்பினர்களை அங்கு சந்திக்கலாம்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts