TamilSaaga

“சிங்கப்பூரில் கழிவறையில் இருந்து Heroin பறிமுதல்” – 60 வயதுக்கு மேற்பட்ட 5 பேர் கைது

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (CNB) சமீபத்திய போதைப்பொருள் அமலாக்க நடவடிக்கையில் நேற்று புதன்கிழமை (ஜனவரி 5) காபி பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 1 கிலோ ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சி தரும் தகவலாக போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 60 வயதுடைய ஐந்து சிங்கப்பூரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“சிங்கப்பூரில் பணிபுரியும் Class 3 மற்றும் 4 Driver-கள்” : கம்பெனி மாற்றம் தேவைப்படுபவர்கள் Apply செய்யலாம்

கடந்த புதன்கிழமை அதிகாலையில், CNB அதிகாரிகள் 61 வயதுடைய நபரை Tampines Street 22ல் கைது செய்தனர். அவரிடமிருந்து 17 பொட்டலங்கள் மற்றும் ஒரு வைக்கோலில் அடைக்கப்பட்ட 132 கிராம் ஹெராயின் ஆகியவற்றைக் கைப்பற்றினர். கைதான அவர் சோவா சூ காங்கில் உள்ள அவரது குடியிருப்பு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு மேலும் 6 கிராம் ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நார்த் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள ஒரு பிரிவில் அதே நாள் காலை 63 முதல் 65 வயதுடைய மூன்று ஆண்கள் மற்றும் 65 வயதுடைய ஒரு பெண்ணைக் கைது செய்தது CNB. இந்த அமலாக்க நடவடிக்கைகளின்போது மொத்தம் 100 பாக்கெட்டுகள் மற்றும் 794 கிராம் ஹெராயின் அடங்கிய 10 ஸ்ட்ராக்கள், மேலும் 5 கிராம் Ice ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. சில ஹெரோயின் பொதிகள் அந்த வீட்டில் உள்ள கழிவறையில் இருந்து மீட்கப்பட்டதுடன், மற்றவை குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட காபி பாக்கெட்களில் காணப்பட்டன.

சிங்கப்பூர்.. உங்கள் Dating அனுபவத்தை வண்ணமயமாக்க தனித்துவமான சில யோசனைகள் – முழு விவரம்

இந்த நடவடிக்கைகளில் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் $66,000 என்று CNB தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts