TamilSaaga

சிங்கப்பூர் MOM பெயரை சொல்லியே ஏமாற்றும் கும்பல்.. வெளிநாட்டு ஊழியர்கள் உஷாராக இருப்பது எப்படி? – மனிதவள அமைச்சகம் தரும் Tips

சிங்கப்பூரை பொறுத்தவரை இங்கு வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுக்கு ஏதேனும் இன்னல்கள் ஏற்படும் பட்சத்தில் நமது மனிதவள அமைச்சகத்தை அணுகினால் நிச்சயம் உதவி கிடைக்கும் என்றும் குறிப்பிடத்தக்கது. அதே போல எந்தவித பிரச்சனையிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க பல வழிகளையும் அவ்வப்போது தனது இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றது நமது மனிதவள அமைச்சகம்.

“காதலியின் நடத்தையை கேவலப்படுத்திய சொந்தங்கள்.. அடுத்த நொடி தாலி கட்டி மனைவியாக்கிய இளைஞர்” – சிங்கப்பூரில் உழைத்து இன்று ஊரே வியக்கும் வசதி வாழ்க்கை!

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சிங்கப்பூர் மனித வள அமைச்சகத்தை போலவே நடித்து ஏமாற்றும் கும்பல்கள் சில உருவாகியுள்ளது. ஆகவே அந்த கயவர்களை எப்படி கண்டறிவது? போலி அழைப்புகள், மற்றும் பிற விஷயங்களை எப்படி இனம்கண்டு தங்களை காப்பாற்றிக்கொள்வது என்று MOM ஒரு சிறந்த விளக்கத்தை அளித்துள்ளது.

இது குறித்து சற்று விரிவாக காணலாம்.

போலியான “MOM” இணையதளங்கள், மொபைல் போன் மோசடிகள் அல்லது மின்னஞ்சல் மோசடிகளை குறித்து எப்படிப் புகாரளிப்பது?

இது MOMன் அதிகாரப்பூர்வ இணையதளம், ஆகவே இதில் உங்கள் முழு விவரத்தையும் பதிவு செய்யும், அல்லது நாங்கள் MOM அதிகாரப்பூர்வ அதிகாரிகள் ஆகவே உங்களை பற்றிய முழு தகவலையும் எங்களிடம் கொடுங்கள் என்று அழைப்புகள் அல்லது இணையதள லிங்க் உங்களுக்கு அனுப்பப்படும் நிலையில் முதல் எதற்காக அது வந்துள்ளது என்பதை ஆய்வு செய்யுங்கள்.

உங்களுக்கு துளி அளவு சந்தேகம் வந்தாலும் கூட உடனே 1800 722 6688 என்ற சிங்கப்பூரின் மோசடி தடுத்து எண்ணிற்கு தகவல் கொடுத்துவிடுங்கள்.

சரி எப்படி இது போலியான இணையதளம் என்று கண்டறிவது?

MOMன் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.mom.gov.sg இது தான், இங்குதான் MOM தொடர்பான தகவல்களையும் eService-களையும் வழங்கி வருகின்றது நமது சிங்கப்பூர் அரசு. ஆனால் இதிலிருந்து சற்று வேறுபட்டு Ministry of Work Permit போன்ற பல பெயர்களில் போலி இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றது. ஆகவே மேற்குறிப்பிட்ட இந்த இணையதளத்தை தாண்டி வேறு எந்தவிதமான இணையதளங்களையும் தொழிலாளர்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Breaking : கைவிட்டுப் போன கடைசித் துளி நம்பிக்கை… சிங்கப்பூரில் கைதான இந்திய வம்சாவளி மலேசியர் நாகேந்திரன் தர்மலிங்கத்துக்கு தூக்கு தண்டனை உறுதி – கதறும் குடும்பம்!

இது போலியான MOM அதிகாரியின் அழைப்பு என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

இவற்றை கண்டுபிடிப்பது மிகவும் சுலபம், MOM பெயரில் மோசடி செய்யும் ஆசாமிகள் நிச்சயம் உங்களிடம் பணம் அல்லது உங்களை பற்றிய மிகவும் தரவுகளை தான் எதிர்பார்ப்பார்கள். ஆகவே அதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுபவர்களை நீங்கள் சுலபமாக கண்டுபிடிக்கலாம்.

ஆகவே போலிகளை கண்டு ஏமாற்றலாம் எப்போதும் விழிப்போடு இருப்போம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts