TamilSaaga

“திறக்கப்படும் சிங்கப்பூர் – ஜோஹார் எல்லை” : முதல் வாரத்தில் ஆயிரம் பேருக்கு மேல் பயணம் செய்ய ஏற்பாடு

நாடுகளுக்கு இடையேயான எல்லைகள் திறக்கப்பட்டதன் முன்னோடியாக சிங்கப்பூர் தனது தடுப்பூசி பயணப்பாதை VTL திட்டத்தின் வழியாக, படிப்படியாக ஒவ்வொரு நாடுகளுக்கு இடையிலான பயணிகளின் வருகையை முறைப்படுத்தி வருகிறது.

இதையும் படியுங்கள் : விரைவில் திறக்கப்படும் இந்திய சிங்கப்பூர் வணிக விமான சேவைகள்?

அந்த வரிசையில் விரைவில் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான தரைவழி எல்லை நவம்பர் இறுதிக்குள் திறக்கப்படும் என்றும், அதற்கு தேவையான திட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், நவம்பர் 29 அன்று சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்கும் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்துக்கும் இடையிலான திட்டமிடப்பட்ட VTL விமான சேவையும் , அதே நாளில் தரைவழி எல்லைகளின் திறப்பும் தொடங்கலாம் என்று சிங்கப்பூரின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு கான் கிம் யோங் சனிக்கிழமை அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை  அடிப்படையில்,மலேசியாவின் ஜோஹார் மாகாண முதலமைச்சர் திரு. ஹஸ்னி அவர்கள் தரைவழி எல்லை தங்களுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் திறக்கப்படுவது குறித்து ஞாயிறன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது.

சிங்கப்பூர் அரசாங்கத்தின் அறிவிப்பை தொடர்ந்து, ஜோஹார் மாநில அரசாங்கமும் மலேசியாவின் சுகாதார அமைச்சகமும் இணைந்து, தரைவழி எல்லைகளின் சோதனை சாவடிகளில் சோதனைக்கான நடைமுறைகளை செயல்படுத்துவதற்கு ஏதுவாக எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

எல்லைகள் திறக்கப்பட்ட பிறகு முதல் கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள நபர்கள் மட்டும் தீவிர சோதனைகளுக்கு பிறகு அனுமதிக்கப்படுவார்கள். குடும்பங்களை பிரிந்து இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறியுள்ள திரு கான் அவர்களின் அறிவிப்பு பற்றி கேட்டதற்கு,

மலேசிய அதிகாரிகளின்  சோதனை வசதிகளின் அடிப்படையில் எல்லைகள் திறக்கப்பட்ட முதல் வாரத்தில் 1440 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அப்படி அனுமதிக்கப்பட்டவர்கள் பொது வாகனங்களை பயன்படுத்துவதா அல்லது தங்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்துவதா என்பது குறித்த முடிவு இன்னும் எட்டப்படவில்லை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

இந்த பயணிகளின் எண்ணிக்கையானது இரண்டாவது வாரத்தில் 2500 ஆகவும், மூன்றாவது வாரத்தில் 5000 ஆகவும் உயர்த்தப்படும் என்றும் திரு. ஹஸ்னி அவர்கள் தெரிவித்துள்ளார். பெரும் தொற்று காரணமாக எல்லைகள் மூடப்படுவதற்கு முன்பு ஒரு நாளைக்கு ஏறக்குறைய 3 லட்சம் மலேசியர்கள்,மலேசிய சிங்கப்பூர் தரைவழி எல்லையை தினமும் கடந்து சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts