TamilSaaga

“இரண்டு டோஸ் போட்டும் பயணிக்க முடியவில்லை” : பரிதவிக்கும் பயணி – சிங்கப்பூர் VTL சேவையில் குழப்பம்?

லண்டனில் இருந்து சிங்கப்பூரின் தடுப்பூசி பயண பாதை (VTL) திட்டத்தின் கீழ் சிங்கப்பூருக்குள் வரும் லண்டன் பயணிகள் நமது தீவிற்குள் நுழைவதில் சில சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்றும், இதற்கு அமைப்பில் உள்ள சில “சிக்கல்கள்” தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. சிங்கப்பூருக்கு தனிமைப்படுத்தப்படாத பயணத்தை அனுமதிக்கும் VTL திட்டம் கடந்த அக்டோபர் தொடக்கத்தில் UK க்கும் விரிவுபடுத்தப்பட்டது. பயணிகள் 12 வயதுக்கு மேல் இருந்தால் முழுமையாக தடுப்பூசி போடுவது மற்றும் தடுப்பூசி போட்டதற்கான அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சான்று வைத்திருப்பது போன்ற சில நிபந்தனைகளை கண்டிப்பாக பூர்த்தி செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூர் Shaw Centre பகுதியில் தீ விபத்து”

இருப்பினும், 13 முதல் 15 வயதிற்குட்பட்டவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு தடுப்பூசி போடப்பட்ட பயண அனுமதிகளை (VTPகள்) பெற முடியவில்லை, ஏனெனில் ஒருவரின் தடுப்பூசி நிலையை நிரூபிக்கும் தேசிய சுகாதார சேவை (NHS) கோவிட் பாஸ் அவர்களிடம் இல்லை. காரணம், இங்கிலாந்து அரசாங்கம் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இவற்றை வழங்குகிறது என்பதே இந்த பிரச்சனைக்கு காரணம்.

CNA அளித்த தகவலின்படி திருமதி ஹெலன் கோவின் குடும்பத்திற்கு இது போன்ற பிரச்சனை அவர்கள் சிங்கப்பூர் வந்தபோது ஏற்பட்டுள்ளத. குறிப்பாக, அவரது மருமகள், 15, மற்றும் மருமகன், 13, இருவரும் நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள், இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு தங்கள் தந்தையுடன் மீண்டும் இணைவதற்காக சிங்கப்பூர் திரும்ப அவர்கள் முயன்றுள்ளனர். அவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளார்கள், தங்கள் சொந்த நாட்டிக் கிடைத்த பாஸை வலியுறுத்துகிறீர்கள், அதனால் என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை,” என்று 48 வயதான திருமதி கோ கூறினார்.

12 வயதிற்குட்பட்ட தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் இந்த VTL விமானங்களில் ஏற அனுமதிக்கப்படுவதால் நிலைமை முரண்பாடாக இருப்பதாக திருமதி கோ மேலும் கூறினார். அதிகாரிகளுடனான தனது கடிதப் பரிமாற்றத்தை விவரித்த திருமதி கோ, குழந்தைகளுக்கு தடுப்பூசி பதிவுகளை வழங்கியும் அவை ஒப்புக் கொள்ளப்படவில்லை என்றார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

CNAன் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, NHS கோவிட் பாஸ் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை அறிந்திருப்பதாக CAAS கூறியது. சிங்கப்பூரின் வரையறையின்படி 13 முதல் 15 வயதுடைய இளைஞர்கள் இருந்தால், NHS கோவிட் பாஸைப் பெற முடியாவிட்டால், அவர்கள் பாதுகாப்பான பயண அலுவலகத்திற்கு இங்குள்ள விசாரணைப் படிவத்தைப் பயன்படுத்தி, அவர்களின் டிஜிட்டல் தடுப்பூசி பதிவேட்டில் இருந்து பெறலாம் என்றும் தற்போது பிரச்னையை எதிர்கொள்ளும் அவரின் பயணம் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Related posts