TamilSaaga

மார்ச் 2023க்குள் 2,000 பணியாளர்களை பணியமர்த்த முடிவு.. ஏற்கனவே 800 பேரை பணியமர்த்தியுள்ளோம் – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

பெருந்தொற்றின் நிலை மாறி விமானப் பயணம் தொடர்ந்து வேகமெடுத்து வருவதால், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சுமார் 2,000 பணியாளர்களை புதிதாய் நியமிக்க ஆவணம் செய்து வருகின்றது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்த பணியமர்த்தல் பணியை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நடத்தி வருகின்றது.

இதுவரை 800க்கும் மேற்பட்ட Cabin Crew உறுப்பினர்கள் ஏற்கனவே பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் ஐந்தில் மூன்று பேர் முன்னாள் Cabin Crew உறுப்பினர்கள் என்றும், அவர்கள் பெருத்தொற்று காரணமாக வேலையை விட்டவர்கள் என்றும் ஏர்லைன்ஸ் கூறியுள்ளது.

சிங்கப்பூரின் தேசிய விமான சேவை நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) சுமார் இரண்டு வருட முடக்கத்திற்குப் பிறகு தங்கள் விமானங்களுக்கான Cabin Crew ஆட்சேர்ப்பை மீண்டும் தொடங்கவிருப்பதாக மாதம் அறிவித்தது.

சிங்கப்பூரில் கிரேன் கவிழ்ந்து விபத்து.. மேலும் ஒரு ஊழியர் பலி – தொழிலாளர்கள் உச்சகட்ட கவனத்துடன் பணிபுரிய வேண்டுகோள்!

தற்போது அந்த நிறுவனம் அதன் இணையதளம் மூலம் அதற்கான விண்ணப்பங்களை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த SIA செய்தித் தொடர்பாளர் “மனிதவளத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக” கேபின் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு இயக்கம் செய்யப்படுகிறது என்றார்.

நடுவானில் Cockpitக்குள் சல்லாபம்.. மாணவியுடன் பயிற்சி விமானி எடுத்த “கீழ்த்தரமான வீடியோ” – இறுதியில் இருவருக்கும் செக் வைத்த நிறுவனம்!

கடந்த பிப்ரவரி 2020ல் கோவிட்-19 தொற்றுநோய்க்குப் இணங்கும் வகையில் SIA விமான நிறுவனம் அனைத்து தரை நிலை ஊழியர்களுக்கான பணியமர்த்தலை நிறுத்தியது. மேலும் தங்களுக்கான செலவைக் குறைக்க அது எடுத்த மற்ற நடவடிக்கைகளில் கேபின் குழுவினரை “முன்கூட்டியே விடுவித்தல்” அல்லது ஓய்வு வழங்குதல் ஆகியவை அடங்கும்.

இந்நிலையில் தற்போது மீண்டும் கேபின் Crew பணியாளர்கள் தற்போது சேர்க்கப்பட்டு வருகின்றனர், குறிப்பாக ஏற்கனவே பணியாற்றிய பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts