TamilSaaga

“சிங்கப்பூரில் பரவும் நூதன வகை மோசடி” : இளம் பெண்களே உஷார் – தயங்காமல் போலீசாரை அணுகுங்கள்

சிங்கப்பூரில் ஒரு தனியார் டெலிகிராம் குழுவில் தனது புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படுவதாக ஒரு இன்ஸ்டாகிராம் செய்தியைப் பெற்றபோது, செல்வி. க்லெனிஸ் டோங் மிகுந்த கவலைக்கு உள்ளாகினார். அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு ஒரு பெண்ணுடையது என்றும், டெலிகிராம் குழுவான SG Nasi Lemakன் “ரீமேக்” தான் அந்த டெலிகிராம் குழு என்றும், அந்த இளம் பெண்ணிடம் அந்த இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து கூறப்பட்டுள்ளது.

“மலேசியாவின் Kelantan பகுதியில் கோர விபத்து” – சிங்கப்பூரின் முன்னாள் பத்திரிகையாளர் Marc Lourdes காலமானார்

மேலும் அந்த டெலிகிராம் குழுவில் பெண்களின் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்பட்டன என்று எச்சரிக்கப்பட்டுள்ளார். ஆனால் 22 வயதான அந்த மாணவி, தி சண்டே டைம்ஸிடம் அப்படிப்பட்ட படங்களை தான் எடுத்ததேயில்லை என்று கூறி கூறினார். “SG Nasi Lemak போன்ற மற்றொரு குழு உள்ளது என்ற எண்ணம் மற்றும் அதில் எனது புகைப்படங்கள் மற்றும் அதனால் பல பெண்கள் பாதிக்கப்படலாம் என்ற எண்ணம் திகிலூட்டுகிறது என்று அந்த பெண் கூறினார். டெலிகிராமில் SG நாசி லெமாக் குழுவில் 44,000 உறுப்பினர்கள் இருந்தனர். அதன் நிர்வாகிகளில் ஒருவருக்கு கடந்த ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது, மற்றொருவருக்கு கட்டாய சிகிச்சை உத்தரவு வழங்கப்பட்டது. இரண்டு இளைஞர்களுக்கு நன்னடத்தை வகுப்புகள் வழங்கப்பட்டது.

செல்வி. டோங், அந்தப் பெண் நட்பாகத் தோன்றியதாகவும், தன் சார்பாக அந்த டெலிகிராம் குழுவில் ஏற்கனவே புகார் செய்ததாகக் கூறி, தானும் அதைச் செய்ய பரிந்துரைத்ததாகவும் கூறினார். செல்வி. டோங் மேலும் இந்த நிகழ்வு குறித்து தகவலைக் கேட்க, அந்த குறிப்பிட்ட டெலிகிராம் குழுவில் சேர்வதற்கான இணைப்பு அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஜனவரி 27 அன்று, தனக்கு அந்த செய்திகள் வந்த அதே நாளில், ST-யிடம் பேசிய டோங், புகைப்படங்களைத் தவிர, தனக்கும் ஒரு மனிதனுக்கும் இடையே நடந்த செய்தி பகிர்வு குறித்த ஒரு ஸ்கிரீன் ஷாட் இருப்பதாகவும் அந்த நபர் கூறியபோது தான் தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறினார்.

இறுதியில் ஒரு தனிப்பட்ட குழுவில் இணைவதற்காக அவர் எனக்கு ஒரு இணைப்பை அனுப்பியபோது, ​​அது ஒரு மோசடி என்று எனக்கு தெரியவந்தது. அந்த லிங்க் Facebook பக்கம் ஒன்றுக்கு இணைப்பை தந்ததாகவும் அதில் தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்கள் வேண்டுமென்றும் மற்றும் OTP ஒன்றும் அனுப்பப்படும் என்றும் கூற, அவர் சுதாரித்து மேற்கொண்டு எந்த தகவலும் அளிக்காமல் போலீசில் புகார் அளித்துள்ளார். “இத்தகைய மோசடிகள் மிகவும் பயமாக இருக்கிறது, ஏனெனில் பல சிறுமிகளுக்கு அவர்களின் புகைப்படங்கள் பரவிவிடுமோ என்ற உண்மையான பயமும், அவற்றை அகற்ற அவர்கள் எதையும் செய்ய நேரிடும் என்றும் டோங் கவலையுடன் கூறினார்.

“உன்ன நம்பி பின்னால உட்கார்ந்தது என் தப்பு” : சிங்கப்பூரில் பார்க்கிங்கில் “தில்லுமுல்லு” செய்த ஓட்டுநர் – இது தான் Instant Karma போல!

19 வயதுள்ள Reiane என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களில் இரண்டு முறை இதுபோன்ற மோசடிகளை சந்தித்துள்ளார். பாலிடெக்னிக் மாணவியான அவர், கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் பேஸ்புக்கில் தனது முகவரி உள்ளிட்ட அந்தரங்க விவரங்கள் ஒரு தனியார் ஃபேஸ்புக் மன்றப் பக்கத்தில் பகிரப்படுவதாக தனக்கு ஒரு செய்தி வந்ததாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. போலீசார் தற்போது இந்த நூதன மோசடியாளர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts