TamilSaaga

சிங்கப்பூர் Pan-Island Express Way : 7 மோட்டார் சைக்கிள்களை கண்முடித்தனமாக இடித்து தள்ளிய கார் – Video

சிங்கப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 13) பிற்பகல் ஏழு மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதை அடுத்து, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக 48 வயதான ஆண் கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கேள்விகளுக்குப் பதிலளித்த சிங்கப்பூர் போலீசார், நேற்று மாலை 3.50 மணியளவில் பெடோக் நார்த் ஃப்ளைஓவர் அருகே சாங்கியை நோக்கி பான்-ஐலண்ட் எக்ஸ்பிரஸ் வேயில் நடந்த விபத்து குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக கூறினார்கள்.

Expressway Accident – Video Courtesy Sg Road Vigilante FB Page

“சென்னை பெண்ணை மணக்கும் கிரிக்கெட் வீரர் Maxwell” – ஆஸ்திரேலிய மாப்பிள்ளைக்கு அடிக்கப்பட்ட “பாரம்பரிய தமிழ் பத்திரிகை”

44 வயதான ஆண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, ​​அருகில் உள்ள வாய்க்காலில் விழுந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறியது. மற்றொரு நபர் சிறிய காயங்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மறுத்தார் என்றும் SCDF தெரிவித்தது.

இந்த விபத்து குறித்து போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன, சமூக ஊடகங்களில் பரவும் சம்பவத்தின் வீடியோ, ஈரமான மற்றும் வழுக்கும் அதிவேக நெடுஞ்சாலையில் பல மோட்டார் சைக்கிள்கள் அடுத்ததாக விழுந்து கிடக்கிறது. மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் ஒருவர் மீது ஒருவர் இடிந்து விழுந்துள்ளார் என்று அதிலிருந்து நமக்கு புரிகின்றது. சிறிது தூரத்தில், வெள்ளை நிற ஓப்பல் அஸ்ட்ராவுக்கு அடுத்ததாக குப்பைகளுக்கு இடையே ஒரு மோட்டார் சைக்கிள் அதன் பக்கத்தில் கிடப்பதைக் காணலாம்.

“நாம் வீழ்ந்த அந்த ஒரு நாள்” : சிங்கப்பூர் முழுவதும் ஒலிக்கப்போகும் “எச்சரிக்கை சிக்னல்” – என்று? எப்போது? ஏன்?

44 வயதான அவர், அந்த அதிவேக நெடுஞ்சாலைக்கு அடுத்துள்ள ஒரு வடிகால் பகுதியில் நீரில் மூழ்கி கிடப்பது போல் காணப்பட்டது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts