TamilSaaga

சிங்கப்பூரில் உயிரிழந்த மூதாட்டி : “நான்காவது டோஸ் தடுப்பூசி தான் காரணமா?” – பிரேத பரிசோதனை சொல்வதென்ன?

சிங்கப்பூரில் 103 வயது மூதாட்டிக்கு கோவிட்-19 தடுப்பூசியின் நான்காவது டோஸ் தவறாக வழங்கப்பட்டதாக கூறப்படும் விஷயத்தில் சிங்கப்பூ சுகாதார அமைச்சகம் (MOH) “முழுமையான விசாரணையை” நடத்தி வருவதாக நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 4) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரிவாக்கம் பெரும் Marina Bay Sands : 1.3 பில்லியன் வெள்ளி முதலீடு செய்துள்ள நிறுவனம் – VTL நம்பிக்கை தருவதாக நிறுவன COO அறிவிப்பு

ECON ஹெல்த்கேர் – சாய் சீ நர்சிங் ஹோமில் வசிக்கும் அந்த மூதாட்டிக்கு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் PanCare மெடிக்கல் கிளினிக்கின் மொபைல் தடுப்பூசி குழுவால் நான்காவது டோஸ் வழங்கப்பட்டது என்றும். அதற்கு அடுத்த மாதம் அந்த மூதாட்டி இறந்ததும் தற்போது தெரியவந்துள்ளது. “அந்த மூதாட்டி இதற்கு முன்பு மூன்று டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றிருந்தார், மேலும் 2021 டிசம்பர் 13 அன்று நான்காவது ஷாட் தவறாக வழங்கப்பட்டது” என்று MOH தெரிவித்துள்ளது.

“டிசம்பர் 16, 2021 அன்று, குடியிருப்பாளர் நிமோனியா மற்றும் ஹைபோநெட்ரீமியா பாதிப்பால் சாங்கி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.” இதனையடுத்து அந்த மூதாட்டி கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி மரணமடைந்தார். “அவருடைய மரணம் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்ட மரண விசாரணை அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் இறப்புக்கான முக்கிய காரணம் நிமோனியா என்று கண்டறியப்பட்டது, பிற காரணிகள் பெருமூளைச் சிதைவு (அல்லது பக்கவாதம்) மற்றும் கரோனரி தமனி நோய் ஆகியவை ஆகும், ஆனால் இவை முதியவர்களுக்கு பொதுவான நோய் செயல்முறைகளாகும்.

“ஒரே நாளில் மூன்று மடங்கு உயர்ந்த தொற்று எண்ணிக்கை” – சிங்கப்பூரில் தொற்றுக்கு மேலும் 6 பேர் பலி

“ஆனால் இந்த மரணத்திற்கான காரணங்கள் தடுப்பூசியுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை பிரேத பரிசோதனையாளர் தீர்மானிக்கவில்லை” என்று MOH தகவல் அளித்துள்ளது. “இந்தச் சம்பவத்தை தீவிரமாகக் கருதுவதாகவும், முழுமையான விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும்” சுகாதார அமைச்சகம் கூறியது. விசாரணைகள் பிப்ரவரியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts