TamilSaaga

“நாம் வீழ்ந்த அந்த ஒரு நாள்” : சிங்கப்பூர் முழுவதும் ஒலிக்கப்போகும் “எச்சரிக்கை சிக்னல்” – என்று? எப்போது? ஏன்?

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) வரும் செவ்வாய்கிழமை (பிப்ரவரி 15) ஒரு “முக்கியமான செய்தி” தரும் சமிக்ஞையை அதாவது ஒரு Signalஐ ஒலிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது எச்சரிக்கை அமைப்பு சைரன்கள், நாடளாவிய ரீதியில் ஒலிக்கப்படும். இந்த ஒரு நிமிட பயிற்சியானது மாலை 6.20 மணிக்கு இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

“சிங்கப்பூர் உள்பட 82 நாடுகள்” : இந்தியா அளித்த தளர்வுகள் என்னென்ன? – எப்போது அமலாகும்? Detailed Report

இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஒரு செய்தி வெளியீட்டில் SCDF கூறியதாவது, “இந்த ஒரு நிமிட நீள ஒலி பயிற்சி காரணமாக யாரும் பயப்பட வேண்டாம்”. “மேலும் SGSecure மொபைல் செயலியைக் கொண்ட மற்றும் Silent Mode மற்றும் Vibrate Mode முறையில் இல்லாத அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் இந்த சிக்னல் ஒலிக்கும்”. என்று சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை அறிவித்துள்ளது.

“அந்த” ஒரே நாளில் 483 திருமணங்கள் : சிங்கப்பூர் Registry of Marriages அளித்த சுவாரசிய தகவல் – அப்படி என்ன இருக்கு அந்த தேதியில்?

இந்த சிக்னல் ஒரு முக்கிய அறிவிப்பை அளிக்க ஒலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது, ஆம் 1942ல் ஜப்பானியர்களிடம் சிங்கப்பூர் வீழ்ந்த நாளான பிப்ரவரி 15ம் தேதி தான் முழு பாதுகாப்பு தினம். ஒவ்வொரு ஆண்டும், பொது எச்சரிக்கை அமைப்பின் முக்கிய செய்தி சமிக்ஞை தினத்தை நினைவுகூரும் வகையில் ஒலிக்கப்படுகிறது. மேலும் இந்த ஒலி மற்றும் ஒளிபரப்புச் செய்தியானது, பொது எச்சரிக்கை அமைப்பு சிக்னல்களை பொதுமக்களுக்குப் பழக்கப்படுத்துவதற்கும், சிக்னலைக் கேட்டவுடன் பொதுமக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் SCDF எடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts