TamilSaaga

“சிங்கப்பூர் கூரியர்களை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்” : மலேசிய, சிங்கப்பூர் போலீஸ் நடத்தும் அதிரடி சோதனை

சிங்கப்பூரில் மலேசிய நாட்டில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் ஒரு மோசடி கும்பல் ஒன்று சிங்கப்பூரில் கூரியர் சேவைகளைப் பயன்படுத்தி நமது குடியரசின் மூலம் மற்ற நாடுகளுக்கு போதைப்பொருட்களைக் கொண்டு சென்றது தற்போது தெரியவந்துள்ளது. அந்த மோசடி கும்பல் கடந்த ஜனவரி முதல் இந்த முறையில் செயல்படுவதாக நம்பப்படுகிறது. மற்றும் ஜூலை மாதம் முதல் மத்திய போதைப்பொருள் பணியகம் (CNB) மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

சிங்கப்பூரின் CNB அளித்த தகவலின் பேரில், ராயல் மலேசிய காவல்துறையின் போதைப்பொருள் குற்ற விசாரணை பிரிவு (NCID) கடந்த செப்டம்பர் 24 மற்றும் 28-க்கு இடையில் அந்த மோசடி கும்பலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஐந்து மலேசியர்களை அதிரடியாக கைது செய்தது. 21 மற்றும் 71 வயதிற்குட்பட்ட நான்கு பெண்களும் ஒரு ஆணும் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

சிலாங்கூர், நெகேரி செம்பிலன் மற்றும் கோலாலம்பூரில் நடந்த தொடர் சோதனைகளின் போது, ​​சுமார் RM4.9 மில்லியன் (சிங்கப்பூர் மதிப்பில் 1.6 மில்லியன்) மதிப்புள்ள சுமார் 55 கிலோ போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சிங்கப்பூர் அரசின் CNB இன்று புதன்கிழமை (அக்டோபர் 6) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மொத்தத்தில், 5.8 கிலோ மெத்தாம்பேட்டமைன் மற்றும் 14.8 கிலோ கெட்டமைன், அத்துடன் 34.3 கிலோகிராம் பவுடர் மற்றும் பொதுவாக MDMA என அழைக்கப்படும் 30.1 லிட்டர் திரவ மெத்திலெனெடாக்ஸிமெதாம்பேட்டமைன் கைப்பற்றப்பட்டன.

மலேசிய ஊடகங்களுடனான பத்திரிகையாளர் சந்திப்பில், NCID ஆனது சுமார் RM2,40,000 மதிப்புள்ள மூன்று கார்களையும், மேலும் RM 4,26,000-ஐ 11 வங்கிக் கணக்குகளிலிருந்தும் கைப்பற்றியதாகக் கூறியது. “சிங்கப்பூரின் இதுபோன்ற போதைப்பொருட்களை பிற நாடுகளுக்கு அனுப்ப சிங்கப்பூர் இணைப்பைப் பயன்படுத்தும் கும்பல்களின் செயல்பாடுகளை சிங்கப்பூர் பொறுத்துக் கொள்ளாது, மேலும் CNB எங்கள் வெளிநாட்டு சகாக்களுடன் தொடர்ந்து போதைப்பொருட்களை தடுக்கவும், சிங்கப்பூர் ஒரு டிரான்ஸ்-ஷிப்மென்ட் மையமாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் தொடர்ந்து வேலை செய்யும் என்று CNB கூறியது.

Related posts