TamilSaaga

இதுதான் “அல்டிமேட் Update” : அனைத்து இந்திய நகரங்களுக்கும் VTL விரிவுபடுத்தப்படுகிறது – சிங்கப்பூர் CAAS அளித்த “Green Signal”

நமது சிங்கப்பூர் அரசு வியட்நாம் மற்றும் கிரீஸுக்கு இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 4) புதிய தடுப்பூசி போடப்பட்ட பயண பாதைகளை (VTLs) அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தற்போது மலேசியா, இந்தோனேசியா மற்றும் அண்டை நாடான இந்தியாவில் உள்ள பல நகரங்களுக்கு தனிமைப்படுத்தல் இல்லாத VTL பயணத்தை விரிவுபடுத்த முடிவெடுத்துள்ளது. வரும் மார்ச் 16 முதல், மலேசியாவுக்கான சிங்கப்பூரின் VTL சேவை கோலாலம்பூரை கடந்து பினாங்கு வரை நீடிக்கப்படவுள்ளது. சிங்கப்பூருக்கும் பினாங்குக்கும் இடையே இருமார்கமாக நான்கு தினசரி விமானங்கள் இயக்கப்படும் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAS) தெரிவித்துள்ளது.

“போன் செஞ்சு கேட்டா தான் Cancel ஆனத சொல்றாங்க” – சிங்கப்பூரிலிருந்து சென்னை புறப்படும் விமானத்தை ரத்து செய்த ஏர் இந்தியா

அதே போல மார்ச் 16 முதல், இந்தோனேசியாவுக்கான VTL சேவை Bali மற்றும் Denpasar ஆகிய நகரங்களை உள்ளடக்கி Jakarta நகரத்திற்கு அப்பால் நீட்டிக்கப்படும். Bali மற்றும் Denpasarல் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி இரண்டு விமானங்கள் இயக்கப்படும். தடுப்பூசி போடப்பட்ட பயணிகளை மார்ச் நடுப்பகுதியில் இருந்து பாலிக்குள் நுழைய அனுமதிக்கும் சோதனையை இந்தோனேஷியா தொடங்க திட்டமிட்டுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

அதேபோல இந்தியாவிற்கான VTL சேவை என்பது சென்னை, டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களைத் தாண்டி இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களையும் உள்ளடக்கும் என்று CAAS தெரிவித்துள்ளது. “VTL இன் கீழ் இந்த புதிய மையங்களில் இருந்து விமானங்களை செயல்படத் திட்டமிடும் விமான நிறுவனங்கள், தங்கள் திட்டங்களை CAASக்கு சமர்ப்பிக்கலாம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு மோசடியில் சிக்கிய 4722 பேர் : திடுக்கிட வைக்கும் வேலை வாய்ப்பு மோசடி – அமைச்சர் எச்சரிக்கை

வேலை அனுமதி வைத்திருப்பவர்களில், கட்டுமானம், கப்பல் கட்டும் தளம் மற்றும் Process Sector துறையில் உள்ள மலேசியர் அல்லாத வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் அல்லது தங்குமிடங்களில் தங்கியிருக்கும் வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் VTLன் கீழ் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட சிங்கப்பூரர்கள், நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் மற்றும் கொள்கை ஒப்புதல் (IPA) வைத்திருப்பவர்கள் பாஸுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts