TamilSaaga

சிங்கப்பூரில் டிரைவிங் கற்றுக் கொண்டு, லைசன்ஸ் பெறுவது எப்படி ?

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் உள்நாட்டினராக இருந்தாலம், வெளிநாட்டினராக இருந்தாலும் 3A,3C என 2 வகையான டிரைவிங் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த இரண்டு கோர்ஸ்களிலும் சேர்ந்து படிப்பதற்கு பல விதமான விதிமுறைகள் உள்ளது.

3A லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் கிளெட்ச், பெடல் இல்லாத ஆட்டோமெடிக் மோட்டார் கார்களை மட்டுமே இயக்க முடியும். அதுவும் இவர்கள் இயக்கும் காரின் எடை 3000 கிலோவிற்கு அதிகமாகவும், டிரைவர் தவிர்த்து பயணிகள் எண்ணிக்கை 7 பேருக்கு அதிகமாகவும் இருக்கக் கூடாது.

3C லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் ஆட்டோமெடிக் மற்றும் மனிதர்களால் இயக்கப்படும் இரண்டு வகையான கார்களை ஓட்ட முடியும். இந்த வாகனங்களில் எடை 3000 கிலோடிற்கு அதிகமாக இருக்கக் கூடாது. பயணிகளின் எண்ணிக்கையும் 7 பேருக்கு மேல் இருக்கக் கூடாது.

டிரைவிங் கோர்ஸ் விபரம் :

  • 3A,3C இரண்டிற்கும் theory மற்றும் practical வகுப்புகள் உண்டு. அதற்கு பிறகு basic theory test, final theory test, practical test என 3 வகையான test கள் வைக்கப்படும். practical lesson என்பது தனிநபரின் கற்றுக் கொள்ளும் திறனுக்கு ஏற்ப கால அளவு மாறுபடும்.
  • டிரைவிங் கோர்சில் சேருவதற்கான முறையும் தகுதிகளும் :
  • பதிவு செய்பவர் ஆன்லைனிலோ அல்லது நேரிலோ வந்து தான் பதிவு செய்து, சேர வேண்டும்.
  • 18 வயது அல்லது அதற்கு மேல் வயதுடையவராக இருக்க வேண்டும்.
  • உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தகுதி உடையவராக இருக்க வேண்டும்.
  • மாணவர் சேர்க்கையின் போது கண் பார்வை (கண்ணாடி அணிந்தும்) திறன் மற்றும் நிறம் கண்டறியும் திறன் ஆகிய சோதனைகளில் பாஸ் செய்ய வேண்டும்.
  • driver improvement points system ல் 12 க்கும் அதிகமாக எதிர்மறை புள்ளிகளை பெற்றிருக்கக் கூடாது.
  • ஏற்கனவே செல்லத்தகுந்த ஏதாவது ஒரு டிரைவிங் லைசன்ஸ் அல்லது electronic provicional driving licence பெற்று அது ரத்து செய்யப்பட்டோ, தகுதி நீக்கம் செய்யப்பட்டோ இருக்கக் கூடாது.
  • தகுதி பெற்ற டிரைவிங் லைசன்ஸ் பெறுவதற்கான விண்ணப்பம் அளிக்கும் போது பயிற்சி மையத்தில் மட்டுமே போட்டோ எடுக்க வேண்டும்.
  • ஆன்லைன் மூலம் டிரைவிங் வகுப்பில் சேருவதற்கு 3 சிங்கப்பூர் டாலர்கள் செலுத்தி சேர வேண்டும்.
  • பயிற்சி வகுப்பில் சேருவதற்கு முன் தரப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தெளிவாக படிக்க வேண்டும்.

பயிற்சியில் சேருவதற்காக அளிக்க வேண்டிய ஆவணங்கள் :

  • செல்லத்தக்க நேரடியான NRIC
  • வெளிநாட்டினராக இருந்தால் செல்லத்தக்க FIN card
  • சிங்கப்பூரில் தகுதியுடைய டிரைவிங் லைசன்ஸ் ஏதாவது இருந்தால் அளிக்க வேண்டும்.
  • electronic Provisional driving licence ஏதாவது இருந்தால் அளிக்க வேண்டும்.

வகுப்பு துவங்குவதற்கு ஒரு நாள் முன்பாக எஸ்எம்எஸ் வழியாக zoom meeting link அனுப்பி வைக்கப்படும்.சுமார் 40 நிமிடங்கள் நடைபெறும் இந்த மீட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டும். இந்த மீட்டிங் நடைபெறும் போது கேமிரா முகத்திற்கு நேராக இருக்க வேண்டும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து
தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts