TamilSaaga

சிங்கப்பூருக்கு பலரை வேலைக்கு அனுப்பி.. ‘குலதெய்வமாய்’ இருந்த “பிரோஸ் கான்” திடீர் மரணம் – பேரிடியாக அமைந்த இழப்பு!

“அகவை தமிழ்; தொழில் பழகு” எனும் யூடியூப் சேனலை உங்களில் பலர் பார்த்திருக்க வாய்ப்புண்டு. பிரோஸ் கான் என்பவர் தான் இந்த சேனலின் உரிமையாளர்.

தொடக்கத்தில் சேனலை லாபகரமாக செயல்படுத்தத் தடுமாறினாலும், தனது பேச்சாற்றலால் மக்களை கவர்ந்தார். இவரது சேனலில் ஏதோ ஒன்று உபயோகமாக உள்ளது என்று நினைக்க வைத்தார்.

இதற்காக பிரோஸ் கான் எடுத்துக் கொண்ட களம் “தொழில்”.. அதாவது வணிகம். சுய தொழில் செய்து நீங்களே முதலாளியாக இருங்கள் என்பதே இவரது வேத மந்திரம்.

இவரது இந்த ஃபார்முலா நன்றாக ஒர்க் அவுட் ஆக, Followers குவியத் தொடங்கினார்கள். எப்படியெல்லாம் சிறு முதலீட்டில் தொழில் செய்யலாம்? லாபம் பார்க்கலாம்? என்று தேடித் தேடி வீடியோக்கள் பதிவிட, அதிக அளவில் மக்கள் பார்க்க தொடங்கினார்கள்.

Business ideas, small business ideas, business ideas in tamil எனும் இவரது யூடியூப் Keywords தான் இவரது பலம். குறிப்பாக, business ideas in tamil என்று யூடியூபில் நீங்கள் டைப் செய்வதால், நிச்சயம் இவரது வீடியோக்களை பார்க்க நேரிடும்.

அதேசமயம், இவர் வெளியிட்ட சிங்கப்பூர் சீரிஸ் பலருக்கும் பயனுள்ளதாக அமைந்தது. குறிப்பாக பலரும் இவரிடம் சிங்கப்பூர் வேலை வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தனர். இவரது தகவல்கள் அனைத்து நேர்மையாக இருக்கும் என்பதால், இவரது வீடியோக்களை மக்கள் முழுமையாக நம்பினார்கள். அந்த நம்பிக்கையும் இவரது பலம் தான்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் முதன் முறையாக.. 11 வயது சிறுமிக்கு வந்த கொடுமை – கடவுளை வேண்டிக் கொண்டு மருத்துவர்களிடம் மகளை ஒப்படைத்த பெற்றோர்!

சிங்கப்பூர் வேலை வாய்ப்புகள் குறித்த யதார்த்த நிலையை இவர் பேசினார். அதிகம் பணம் செலுத்தி ஏமாறாமல் இருக்கும் வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்தார். இதனால் பலரும் தனிப்பட்ட முறையில் இவரை தொடர்பு கொண்டு, சிங்கப்பூர் செல்வதில் உள்ள சாதக, பாதக அம்சங்களை கேட்டறிந்தனர். இதன் மூலம், பலருக்கு சிங்கப்பூர் செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. அங்கு நல்ல வேலை கிடைத்து அமரவும் உதவி புரிந்தார். சிங்கப்பூர் மட்டுமின்றி, மலேசியா, அரபு நாடுகள், கனடா என்று பல நாடுகளின் வேலைவாய்ப்பு குறித்த புரிதல்களை, விவரங்களை, உண்மைகளை இவர் பகிர்ந்து கொண்டார்.

அதுமட்டுமின்றி, “Delhi Wholesale Market பயணம்” என்ற இவரது சீரிஸ் மாபெரும் வெற்றி அடைந்தது. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து தொழில் முனைவோர் இந்த பயணத்தில் இவருடன் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தான் கடந்த பிப்ரவரி 16ம் தேதி மாரடைப்பு காரணமாக பிரோஸ் கான் உயிரிழந்தார். சுய தொழில் செய்து முன்னேறலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த பலருக்கும் இந்த இழப்பு பேரிடியாக அமைந்தது. கடந்த பிப்.27ம் தேதி “Delhi Wholesale Market பயணம்” சீரிஸின் அடுத்தக்கட்ட பயணத்துக்கு தயாராகிக் கொண்டிருந்த போது தான் நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் காலமானார்.

இன்னமும் பலரும் இவரது இழப்பை நம்பாமல் அவரது நம்பருக்கு தொடர்ந்து Call செய்து வருகின்றனர். ஆனால், அதை attend பண்ண பெரோஸ் கான் உயிருடன் இல்லை!.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts