TamilSaaga

“போன் செஞ்சு கேட்டா தான் Cancel ஆனத சொல்றாங்க” – சிங்கப்பூரிலிருந்து சென்னை புறப்படும் விமானத்தை ரத்து செய்த ஏர் இந்தியா

சிங்கப்பூர் மற்றும் இந்தியா இடையே பல விமான சேவை நிறுவனங்கள் தற்போது தங்களது சேவைகளை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக நமது சிங்கப்பூர் அரசு வழங்கும் VTL சேவைகள், பல காரணிகளால் தடைப்பட்டிருந்த நிலையிலும் Travel Bubble என்று அழைக்கப்படுகின்ற NON VTL சேவைகள் தொடர்ந்து இயங்கி வந்தது. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் Indigo மற்றும் Air India Express போன்ற விமான சேவை நிறுவனங்கள் சிறப்பான முறையில் இன்றளவும் சேவைகளை வழங்கி வருகின்றனர்.

“சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு மோசடியில் சிக்கிய 4722 பேர் : திடுக்கிட வைக்கும் வேலை வாய்ப்பு மோசடி – அமைச்சர் எச்சரிக்கை

இந்நிலையில் தான் கடந்த ஜனவரி மாத இறுதியில் இருந்து மீண்டும் VTL சேவைகள் இயங்கி வரும் நிலையில் சிங்கப்பூர் மற்றும் தமிழகம் இடையே தடையின்றி விமான போக்குவரத்து செயல்பட்டு வருகின்றது. மேலும் தமிழர்களுக்கு கூடுதல் சிறப்பாக பல தளர்வுகளையும் சிங்கப்பூர் அரசு வழங்கி வருகின்றது. S Pass, Dependent Pass, Long Time Pass மற்றும் Employment Pass மூலம் தமிழகம் உள்ளிட்ட பிற இடங்களில் இருந்து வருபவர்கள் Entry Approval எடுக்காமல் வந்து செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. Changi விமான நிலையத்தில் அவர்களுக்கு PCR சோதனையிலும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தான் சிங்கப்பூர் சென்னை வழியாக இயக்கப்படும் ஏர் இந்தியா சேவைகள் அனைத்து திங்கள் கிழமைகளிலும் முன் அறிவிப்பு ஏதுமில்லாமல் ரத்து செய்யப்படுகிறது என்ற புகாரை பயணிகள் சில தினங்களுக்கு முன்பு முன்வைத்தனர். வாரம்தோறும் அனைத்து திங்கள்கிழமைகளிலும் இந்த சிங்கப்பூர் சென்னை சேவை ரத்தாகி வந்த நிலையில் தற்போது நாளை மார்ச் 5ம் தேதி சிங்கப்பூர் சென்னை Air India AI 347 விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலும் பயணி ஒருவர் ஏர் இந்தியா வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு போன் செய்தபோது கிடைத்த தகவல் என்றும். ஏர் இந்தியா தானாக முன்வந்து இந்த தகவலை பயணிகளுக்கு அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அடுத்தடுத்து இப்படி முன்னறிவிப்பு இல்லாமல் விமானங்கள் தடைபடுவதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மாற்று விமானங்கள் கேட்கும் பயணிகளுக்கு சுமார் 6 மணி நேர காத்திருப்புக்கு பின் அடுத்த நாள் டெல்லி வழியாக சென்னை செல்லும் விமானத்தில் பயணிக்கலாம் என்று கூறப்படுகிறது.

4 லட்சம் கடன் வாங்கி S-Passல் சிங்கப்பூர் வருபவர்களின் நிலை இதுதான்.. இவ்வளவு தான் சம்பளம்! – உண்மையை புரிந்து கொண்டு கனவு காணுங்கள்!

ஆகவே இந்த விஷயத்தில் ஏர் இந்தியா நல்ல முடிவை உடனடியாக எடுத்தால் பயணிகளுக்கு மிகுந்த நலன்பயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News Source
நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007
9600 223 091

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts