TamilSaaga

அங்க சுத்தி இங்க சுத்தி பழத்தோலில் இருந்து தண்ணீரை சுத்திகரிக்கும் சிங்கப்பூர்… இனி இதுக்கு டிமாண்ட் தானாம்…

புது கண்டுபிடிப்புகளில் எப்போதுமே புதுமை காட்டுவது சிங்கப்பூரின் புதிய யுத்தியாகவே இருந்து வருகிறது. அதில் புதிய வரவாக இருப்பது தான் பழங்களின் தோல்களை பயன்படுத்தி தண்ணீரினை சுத்திகரிக்கும் கண்டுபிடிப்பு. இதில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கிறது என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பழத்தோல் மூலம் MXenes தயாரித்து, அதன்மூலம் சூரிய ஒளியில் பெறப்படும் வெப்பத்தினை கொண்டு, தண்ணீரை சுத்திகரிக்க புதிய வழியை அவர் கண்டுபிடித்துள்ளார். அதாவது பழங்களில் இருந்து பெறப்படும் MXenes மற்றும் சூரிய ஒளியை பயன்படுத்தி தண்ணீரை சுத்தம் செய்யும் முறையால் தண்ணீர் தட்டுப்பாடு பெரிய அளவில் குறையும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலை தேட ரெடியா இருக்கீங்களா… அப்போ இந்த நிறுவனங்கள மிஸ் பண்ணிடாதீங்க..!

புதிய பொருளாக பார்க்கப்படுவது MXenes அல்ல. MXenes-ஐ தயாரிக்க பழத்தோல்களை பயன்படுத்தப்படுவது தான் முதல் முறையாக பார்க்கப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பு வியாபாரத்திற்கு கொண்டு வந்தால் அதனை கொண்டு சிங்கப்பூரில் உருவாகும் உணவுக் கழிவுகள் பெரிய அளவில் குறையும். அதன் மூலம் தண்ணீரை பெரிய அளவில் சுத்தம் செய்யலாம் என்று நம்பப்படுகிறது. இதனால் மின்சார வசதி குறைவாக இருக்கும் இடங்களில் பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சிங்கப்பூரில் சுமார் 20,000 டன் உணவுக் கழிவுகள் உருவாவதால் அதை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் எனத் தோன்றிய ஐடியாவை வைத்தே இதை செய்ததாக இந்த கண்டுபிடிப்பை உருவாக்கிய உதவிப்பேராசிரியர் எடிசன் ஆங் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: வெளிநாட்டு ஊழியர்களின் “வொர்க் பெர்மிட்-ஐ” முதலாளிகள் வைத்துக் கொள்ள முடியுமா?

மேலும் ஜூஸ் பிசினஸ் தான் சிங்கப்பூரில் அதிக அளவில் உணவு குப்பைகளை உருவாக்கிறது. இதில் பயன்பாட்டுக்கு பழங்களில் உள்ள 50 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மீதம் இருக்கும் 50 சதவீதம், பழத்தோல்களாக தூக்கி எறியப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த பிரச்னையை சரி செய்யவே இந்த ஆய்வில் இறங்கியதாக எடிசன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் தேங்காய் மட்டை, ஆரஞ்சு பழ தோல் மற்றும் வாழைப்பழத்தோலை மட்டுமே பயன்படுத்தி MXenes உருவாக்க முயற்சித்து வருகிறார் எடிசன். ஆனால் பிளாஸ்டிக், காகிதம் மற்றும் ஆடைகள் போன்ற கழிவுகளில் கூட MXenes தயாரிக்கலாம் என்றும் எடிசன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts