TamilSaaga

இனி அரிசியெல்லாம் தர முடியாது.. அடம் பிடிக்கும் இந்தியா.. சிங்கப்பூர் அரசு எடுத்த ஸ்மார்ட் மூவ்… நிம்மதி பெருமூச்சு விட்ட வெளிநாட்டு ஊழியர்கள் #Riceban

இந்திய மக்களின் தேவையை பூர்த்தி செய்து அதிகரிக்கும் விலையை கட்டுக்குள் வைக்க, பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியினை ஏற்றுமதி செய்ய கடந்தஹ் 20ந் தேதி முதல் இந்தியா தடையை அறிவித்தது.

இந்தியாவின் இந்த தடையால் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டு இருக்கிறது. 37$ விற்பனை செய்த 25கிலோ சிப்பம் 42$ ஆக்கி விட்டார்கள்.

இதையும் படிங்க: சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்கள்.. ஏஜெண்ட் உண்மையில் உங்கள் வேலைக்கு விண்ணப்பித்துள்ளாரா? Passport நம்பர் மட்டுமே வைத்து கண்டறிவது எப்படி?

உள்நாட்டில் வினியோகத்தை அதிகரித்து விலையை கட்டுப்படுத்துவதற்காக பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த 20-ந் தேதி தடை விதித்தது. இது பல்வேறு நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் சிங்கப்பூர் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே தங்களுக்கு விலக்கு அளிக்குமாறு அந்த நாடு கோரிக்கை விடுத்து உள்ளது.

இதே நேரத்தில், தமிழ்நாட்டில் பல முக்கிய ஊர்களில் உள்ள அரிசி ஆலைகளில் மூட்டைகள் தேங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டுமே 20 சதவீத அரிசி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. மேலும், சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு அதிகளவில் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதையும் படிங்க: வெளிநாட்டு ஊழியர்களின் “வொர்க் பெர்மிட்-ஐ” முதலாளிகள் வைத்துக் கொள்ள முடியுமா?

இந்திய மாநிலங்களில் மழை குறைவாக பெய்ததாலும் அரிசியின் உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கபட்டுள்ளதால் தான் வெளிநாடுகளுக்கு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு மத்திய அரசு தடை செய்தது. அதே நேரத்தில் ஏற்றுமதி தடை செய்யப்பட்டதால் தமிழகத்தின் அரிசி ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசிகள் பல ஆலைகளில் தேக்கமடைந்துள்ளன.

இந்த நிலையில் தான் சிங்கப்பூர் அரசு உணவு கழகம் விலக்கு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ‘சிங்கப்பூர் உணவு கழகம் பல்வேறு வகையான அரிசிகளை இந்தியாவில் இருந்து இறக்குமதியாளர்களுடன் இறக்குமதி செய்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு அரிசி ஏற்றுமதி தடையில் இருந்து சிங்கப்பூருக்கு மட்டுமாவது விலக்கு தர வேண்டி இந்திய அதிகாரிகளுடனும் சிங்கப்பூர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts