சிங்கப்பூரில் வேலைக்கு சென்றால் வாழ்க்கை செட்டில் என நினைக்கும் பல தமிழர்கள் எப்படி வேலை தேடணும் என்ற குழப்பத்திலேயே சில நேரம் நல்ல வாய்ப்பை கூட தவற விட்டுவிடுவார்கள். அப்படி ஒரு நிலையில் நீங்க இருந்தால் இந்த டாப் நிறுவனங்களில் வேலை கிடைத்தால் மிஸ் செய்யாமல் கெட்டியாக பிடித்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: உலக அரங்கில் “சிங்கப்பூர் பாஸ்போர்ட்”-ற்கு கிடைத்த மகுடம்!
ராண்ட்ஸ்டாண்ட் எம்பிளாயர் சமீபத்தில் செய்த ஆய்வின் மூலம் கிடைக்கப்பட்ட 20 நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. சிங்கப்பூரில் வேலைசெய்யும் சுமார் 2,700 ஊழியர்களும் வேலைக்காக காத்திருப்பவர்களை கொண்டும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சம்பளம், ஸ்கில்ஸ், வேலை வாய்ப்பு சமநிலை, வேலையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் ஆகியவை மதிப்பிடப்பட்டன.
பட்டியலில் இடம்பெற்ற 20 நிறுவனங்கள்:
- InterContinental Hotels Group
- JP MorganChase
- Marina Bay Sands
- Medtronic
- Pratt and Whitney
- Procter & Gamble
- Resorts World Sentosa
- SHELL
- UBS
- Singapore Airlines
- Bytedance
- CapitaLand
- Changi Airport Group
- Danaher Corporation
- DBS
- Dyson
- Edwards Lifesciences
- Emerson Asia Pacific
- ExxonMobil
- IBM
இந்த 20 நிறுவனங்களில் 2023ஆம் ஆண்டில் வேலை செய்வதற்கு சிறந்த நிறுவனம் என்ற பெருமையை பெற்று முதல் இடத்தினை பிடித்து இருக்கிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines).