TamilSaaga

வெளிநாட்டு ஊழியர்களின் “வொர்க் பெர்மிட்-ஐ” முதலாளிகள் வைத்துக் கொள்ள முடியுமா?

பொதுவாக சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பணியாற்ற வரும் ஊழியர்களுக்கு தங்களது நிறுவனங்களின் பெயரில் வேலை அனுமதி அட்டையினை சிங்கப்பூர் அரசாங்கத்திடம் இருந்து பெற்றத் தரவேண்டும்

அவ்வாறு பெற்று தரும் வேலை அனுமதி அட்டையை ஊழியர்கள் எப்பொழுதும் தங்களுடனே வைத்துக்கொள்ள வேண்டு்ம்

எந்த காரணத்திற்காகவும் முதலாளிகள் வேலை அனுமதி அட்டையினை வைத்துக் கொள்ளககூடாது. ஏனென்றால் ஊழியர்கள் தங்களின் தேவைகளுக்காக வெளியிடங்களுக்கோ அல்லது பொது இடங்களுக்கோ செல்லும்பொழுது சரியான அடையாளத்திற்காக தொழிலாளிகள் எல்லா நேரங்களிலும் வேலை அனுமதி அட்டையை தன்னுடன் வைத்திருக்க வேண்டும்.

முதலாளி என்ற முறையில் தங்கள் நிறுவன ஊழியர்கள் மற்றும் வீட்டு பணிப்பெண்களின் “பணி அனுமதி அட்டைகளை” வைத்துக்கொள்ள கூடாது.

மேலும் முதலாளிகள் தொழிலாளர்களின் “பணி அனுமதி அட்டைகளை” தங்களிடம் வழங்குமாறு கட்டாயப்படுத்தவும் கூடாது. அதேபோல் தொழிலாளர்களும் தங்கள் “பணி அனுமதி அட்டைகளை” தாங்கள் வைத்துக் கொள்ளுமாறு தங்கள் முதலாளிகளிடம் கேட்கவும் கூடாது.

வேலை அளிப்பவர்கள் தங்களின் தொழிலாளர்களுக்கு “பணி அனுமதி அட்டைகள் மற்றும் லாக்கர்கள்” போன்ற பிற உடமைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான வழிமுறைகளை தங்கள் தொழிலாளர்களுக்கு அமைத்து தரவேண்டும்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் வேலை.. பணம் கட்டுவதற்கு முன்பு.. கொஞ்சம் காத்திருங்க.. சிங்கை அரசே கொடுக்கும் “அதிகாரப்பூர்வ” பட்டியல்!

வேலை அனுமதி அட்டையை முதலாளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வற்புறுத்தினால் நீங்கள் உதவிக்காக “மனிதவள அமைச்சகத்தை” தொடர்பு கொள்ளலாம்.

சிங்கப்பூரின் வேலை நியமனச் சட்டம் மிகவும் கடுமையானது, கட்டுக்கோப்பானதும் கூட. நீங்கள் “சேவை ஒப்பந்தத்தின்” கீழ் வேலைக்கு சேர்க்கப்பட்டிருந்தால் “முக்கிய வேலை நியமன விதிமுறைகளும்”(KETs) பட்டியலிடப்பட்ட சம்பள ரசீதுகளும் உங்களுக்கு வழங்கப்பட வேண்டும். “சேவை ஒப்பந்தம்” கீழ் ஒரு முதலாளியிடம் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியரும்( அவர்களுடைய குடியுரிமை எதுவாக இருந்தாலும்) வேலை நியமன சட்டத்தின் கீழ் இடம் பெறுவார்கள்.

“முக்கிய வேலை நியமன விதிமுறைகள்”(KETs)

உங்கள் முதலாளி முக்கிய வேலை நியமன விதிமுறைகளை( KETs )எழுத்து வடிவில் உங்களுக்கு வழங்க வேண்டும். அதில் “வேலை பற்றிய விவரங்கள், வேலை நேரம் ,மற்றும் ஓய்வு நாள், சம்பளம், விடுப்பு மற்றும் மருத்துவ அணுகூலங்கள், வேலை செய்யும் இடம் “அனைத்தும் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts