TamilSaaga

சிங்கப்பூரில் பள்ளி பேருந்துகளுக்கு மேலும் வெளிநாட்டு ஓட்டுநர்களை நியமிக்க அரசு அனுமதி.. ஓட்டுநர் பற்றாக்குறையால் அரசு எடுத்த முடிவு!

சிங்கப்பூரில் பள்ளிக் குழந்தைகளுக்கான விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் பள்ளி பேருந்துகளை ஓட்டும் ஓட்டுநர்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்ற செய்தி ஏற்கனவே வெளியிடப்பட்டது. ஏராளமான ஓட்டுநர்களின் ஒப்பந்த காலம் முடிவடைந்தது இந்த பற்றாக்குறைகளுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து அரசின் கல்வி அமைச்சகமானது ஆறு பேருந்துகளுக்கு வெளிநாட்டு ஊழியர்களை நியமித்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வழங்கியது.

இந்நிலையில் இதன் அடுத்த கட்டமாக மேலும் எட்டு பேருந்துகளுக்கு வெளிநாட்டு ஊழியர்களை நியமிக்கலாம் என நடத்துனர்களுக்கு சிங்கப்பூரின் கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன் பெயரில் மொத்தம் தற்பொழுது 14 வெளிநாட்டு ஓட்டுநர்களை நியமிக்க அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரை பொருத்தவரை பேருந்துகளுக்கு ஓட்டுனர்களை நியமிக்கும் பொழுது நல்ல தரமான ஓட்டுநர்களை நியமிக்க வேண்டும் என்று அரசு விரும்பும்.

அதனால் தான் பள்ளி பேருந்துகளுக்கு இதுவரை வெளிநாட்டினருக்கு அனுமதி கொடுக்காமல் சிங்கப்பூரில் அனுபவம் பெற்ற நல்ல தரமான ஓட்டுநர்களை நியமிக்க வேண்டும் என்று முடிவெடுத்து இருந்தது. ஆனால் தற்பொழுது ஓட்டுநர் பற்றாக்குறையின் காரணமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களில் ஓட்டுநரின் தகுதி, அனுபவம், இதற்கு முன் ஏதேனும் புள்ளிகள் பெற்றுள்ளாரா என்பதை ஆராய்ந்த பிறகு தரம் வாய்ந்த ஓட்டுனர் நியமிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.

தற்பொழுது 14 ஓட்டுநர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலை மாறி மேலும் அதிகப்படியான ஓட்டுநர்களை சேர்க்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் நம் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான ஓட்டுனர்கள் சிங்கப்பூரில் பணி புரிவதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தகுதி மற்றும் முன் அனுபவம் இருந்தால் வேலைக்கு விண்ணப்பித்து வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Related posts