TamilSaaga

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு தங்கத்தை வாங்கி குவிக்கும் சிங்கப்பூர்… உலகளவில் மூன்றாவது இடத்தை பெற காரணம் தெரியுமா?

தங்கத்தை அதிகமாக விரும்புவது இந்தியா என்று தான் நாம் இதுவரை நினைத்து இருப்போம் ஆனால் உலகிலேயே அதிகம் தங்கம் வாங்கியதில் சிங்கப்பூரின் மத்திய வங்கி உலக அளவில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. முதல் மற்றும் இரண்டாவது இடங்களை சீனா மற்றும் போலந்து ஆகிய நாடுகள் பெற்றுள்ளன. உலக தங்க மன்றம் ஆனது தற்பொழுது அதிகமாக தங்கம் வாங்கும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளன.

இதில் சிங்கப்பூரின் மத்திய வங்கி 2023 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 75 டன் தங்கத்தினை கொள்முதல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. முதலாவது இடத்தில் இருக்கும் சீன நாடு ஆனது 181 டன் தங்கத்தினை இதுவரை கொள்முதல் செய்துள்ளது. மேலும் உலக அளவில் உள்ள மொத்த தங்க சேமிப்பில் 5சதவீதம் சீனாவிடம் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இடத்தில் இருக்கும் போலந்து இதுவரை 105 டன் தங்கத்தினை கொள்முதல் செய்துள்ளது. தங்களது நாட்டின் சேமிப்பு மற்றும் பண வளம் ஆகியவற்றை அதிகரிக்கும் நோக்கில் மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்வதை அதிகரிக்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே சிங்கப்பூரை பொறுத்தவரை தங்கத்தின் இருப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில் தங்கள் நாட்டு பண மதிப்பும் அதிகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் இவை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.மேலும் உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தங்கத்தை அதிகமாக வாங்கி குவித்துள்ளதாக தெரிவித்துள்ளன. இதுவரை வரலாற்றில் இந்த அளவிற்கு தங்கம் வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதுவரை உலக நாடுகள் அனைத்தும் வாங்கிய தங்கத்தின் அளவு 1147 டன் ஆகும்.இது ஐந்தாண்டுகளை கணக்கிடும் பொழுது சராசரி அளவை விட 8 சதவீதம் அதிகமாகும. ஒரு நாட்டின் பண மதிப்பில் தங்கத்தின் பங்கானது மிகவும் ஆச்சரியம் அளிக்கிறது அல்லவா!

Related posts