TamilSaaga

சிங்கப்பூர் வந்தாச்சு… மெடிக்கல் டெஸ்ட் எடுக்க சொல்கிறார்களா… இந்த நோய் இருந்தால் நீங்க திருப்பி அனுப்பப்படுவீர்கள்.. எப்படி எடுக்கப்படும் இந்த டெஸ்ட்கள்

சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு எடுக்கும் மருத்துவ சோதனைகள் எப்படி இருக்கும். இதில் நமது தரப்பில் இருந்து என்னென்ன தகவல்கள் கொடுக்க வேண்டும் என MOM சொல்லும் நெறிமுறைகள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள இதை தொடர்ந்து படியுங்கள்.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை மற்ற நாடுகளைப் போல் வேலைக்கான விசா என்ற ஒன்று நடைமுறையில் இல்லை. வேலைக்கான பெர்மிட் இருந்தாலே போதுமானது. அதை வைத்திருக்கும் ஊழியர்கள் அடுத்து முக்கியமாக வைத்திருக்க வேண்டியது முழு உடல் தகுதிக்கான சான்று தான்.

இதையும் படிங்க: சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்கள் கவனத்திற்கு.. ஏஜென்ட் உண்மையில் உங்கள் வேலைக்கு விண்ணப்பித்துள்ளாரா? Passport எண் மட்டுமே வைத்து கண்டறிவது எப்படி?

தமிழ்நாட்டில் இருந்து வரும் ஊழியர்கள் அங்கையே மருத்துவ சான்றிதழ் பெற்றிருந்தாலும் கூட சிங்கப்பூரில் மீண்டும் எடுக்கப்படும். அது எப்படி இருக்கும்? என்னென்ன டெஸ்ட்கள் இருக்கும். தமிழ்நாட்டினை போல் இங்கு இல்லை. சளி, காய்ச்சல் இருந்தால் கூட முழு உடல் தகுதி என சான்று கொடுக்கமாட்டார்கள். அதற்கான மருத்துவம் பார்க்கப்பட்டு மீண்டும் டெஸ்ட் செய்தபிறகே சான்றிதழ் கொடுக்கப்படும். சாதாரண நோய் முதல் பெரிய நோய் வரை இதே நடைமுறை தான் பின்பற்றபட்டு வருகிறது.

Work permit வைத்திருப்பவர்களுக்கு தான் மெடிக்கல் போடப்படும். s-pass ஊழியர்கள் எல்லாருக்கும் மெடிக்கல் தேவைப்படாது.

இதையும் படிங்க: சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்கள்.. உங்கள் Work Pass Status என்ன? 

முதலில் சிங்கப்பூர் வரும் ஊழியர்களுக்கு மருத்துவ சான்றிதழ் பெற ஒரு விண்ணப்பம் தரப்படும். அதில் மனநோய், ஆஸ்துமா உள்ளிட்ட பல நோய்கள் குறிக்கப்பட்டு இருக்கும். உங்களுக்கு அதில் எதுவும் இருந்தால் அதை குறித்துக்கொண்டு மற்ற தகவல்களை நிரப்பிவிட்டு மருத்துவமனை செல்லுங்கள்.

போனவுடனே மருத்துவர் ரத்த அழுத்தத்தை செக் செய்வார். தொடர்ந்து இதய கோளாறுகள் இருக்கா என்பதை அறிய ஈசிஜி எடுக்கப்படும். இது பெரும்பாலும் 50 வயதுக்கு அதிகமானோருக்கே எடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்ச்சியாக, ரத்த சோகை, வயிற்று பிரச்சனை, நுரையீரல், லிவர், தோல் நோய் இருக்கிறதா என டெஸ்ட் எடுக்கப்படும். மேலும் தோல் நோய்களில் சொரியாஸிஸ், தொழுநோய் டெஸ்ட்கள் கண்டிப்பாக எடுக்கப்படும்.

மேலும், யூரினரி டெஸ்டுகளும், கர்ப்ப பரிசோதனைகள் பெண்களுக்கு கூடுதலாக எடுக்கப்படும். 2 மீட்டருக்குள் சாதாரண பேச்சுகள் கேட்க முடிகிறதா என டெஸ்ட் செய்யப்படும். கண் பரிசோதனை செய்யப்படும் அதற்கு 6/12 என பவர் இருக்க வேண்டும்.

இதில் colour vision டெஸ்ட் டிரைவர் மற்றும் எலக்ட்ரிக்கல் வேலைக்கு வருபவர்களுக்கு மட்டுமே எடுக்கப்படும். உங்களுக்கு colour blind இருந்தால் டிரைவர் மற்றும் எலக்ட்ரிக்கல் வேலைக்கு செல்ல முடியாது.

கடைசியாக முக்கிய டெஸ்ட்டாக HIV டெஸ்ட் எடுக்கப்படும். இதில் நெகட்டிவ் வருபவர்களுக்கே உள்ளே அனுமதி பாசிட்டிவ் வந்தால் உடனே சிங்கப்பூரை விட்டு வெளியேற்றப்படுவார்கள். மேல் சொன்ன எந்த பிரச்னைகளும் இருக்காத ஊழியர்களுக்கு உடனே சான்றிதழ் கொடுக்கப்பட்டு விடும். சிலருக்கு அதற்கான மருத்துவம் பார்க்கப்படும் மீண்டும் டெஸ்ட்கள் எடுக்கப்படும்.

ஒரு சிலருக்கு இருக்கும் வியாதிகள் குணப்படுத்த முடியாது என தெரிந்தாலோ, இது பரவும் எனக் கண்டறிப்பட்டாலோ உடனே சிங்கப்பூரை விட்டு அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுவார்கள் என MOM கூறுகிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts