பொங்கல் என்பது தமிழ் சமூகத்தால் கொண்டாடப்படும் ஒரு அறுவடைத் திருநாளாகும், இது வளமான அறுவடையின் ஆசீர்வாதத்திற்கு நன்றி தெரிவிக்கும் ஒரு பெருவிழா. கடந்த வார இறுதியில், எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் பொங்கல் பண்டிகையை சிறந்த விதத்தில் கொண்டாட ஐந்து பொழுதுபோக்கு மையங்களில் பல்வேறு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நடவடிக்கைகளில் சில திருவிழா விளையாட்டுகள் மற்றும் உணவு பொருட்கள் மற்றும் பராமரிப்பு பொதிகள் விநியோகம் ஆகியவையும் அடங்கும்.
இந்த பொங்கலை எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அர்த்தமுள்ள ஒன்றாக மாற்றியதற்காக, அலையன்ஸ் ஆஃப் கெஸ்ட் ஒர்க்கர்ஸ் அவுட்ரீச், கீட் ஹாங் யூத்ஸ் மற்றும் மேக்பெர்சன் CCன் இந்தியன் ஆக்டிவிட்டி எக்ஸிகியூட்டிவ் கமிட்டி (இதையும் படியுங்கள் : “முடிந்தது VTL தடை”, இந்திய – சிங்கப்பூர் VTL பயணத்தில் மாற்றங்கள் இருக்குமா? – எத்தனை PCR சோதனை எடுக்கவேண்டும்?
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு (2021) இருந்த கட்டுப்படுத்தப்பட்ட கொண்டாட்டங்களைப் போலல்லாமல், இந்த ஆண்டு பொங்கல் பானை ஓவியம் உட்பட பலவிதமான செயல்பாடுகளைக் கண்டது சிங்கப்பூர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு பொங்கலை முன்னிட்டு கால்நடை பண்ணை ஒன்றும் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வருட துவக்கத்தில் அபரிமிதமான விளைச்சலுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா பாரம்பரியமாக இந்தியாவில் உள்ள விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது என்பதை நாம் அறிவோம். உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மற்றும் விவசாய குடும்பங்கள் ஜாதி மத பேதமின்றி இவ்விழாவை கொண்டாடுகின்றனர்.