TamilSaaga

சிங்கப்பூரில் 1000 புதிய வேலை வாய்ப்புகள்.. திரும்பிப் பார்க்க வைக்கும் முக்கிய “அறிவிப்பு” – அதிரடி மாற்றங்களை வெளியிட்ட அமைச்சர் ஈஸ்வரன்

சிங்கப்பூரில் கப்பல் துறையில் மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆம்! இந்த தொழில்துறையின் மதிப்பை $2 பில்லியன் அளவிற்கு வளர்த்து, 1,000 புதிய வேலைகளை உருவாக்க சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.

முன்னதாக, 2018 இல் தொடங்கப்பட்ட Sea Transport Industry Transformation Map-ல், 2025 இல் $4.5 பில்லியன் வளர்ச்சி மற்றும் 5,000 புதிய வேலைகளை இலக்காகக் கொண்டிருந்தது. இப்போது சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக அது 1000 வேலைவாய்ப்பு மற்றும் $2 பில்லியன் வளர்ச்சியாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த துறையில் திருத்தப்பட்ட புதிய திட்டம் குறித்து, Singapore Maritime Week-ன் தொடக்க விழாவில் துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கீட் திங்கள்கிழமை (ஏப்ரல் 4) அறிவித்தார்.

அதில் நான்கு மிக முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

சிங்கப்பூர் துறைமுகங்களை மிகவும் நிலையானதாகவும், இடையூறுகளைத் தாங்கக்கூடியதாகவும் உருமாற்றுதல்

புதுமையான கடல் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தல்

சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களுக்கு ஆதரவு கொடுத்தல்

திறமையான ஆட்களை வேலைக்கு எடுத்தல்

ஆகிய நான்கு அம்சங்கள் இடம்பெற்றன.

மேலும் படிக்க – Kallang Riverside பகுதியில் ஜாக்கிங்… 52 வயது நபரை கடித்த நீர்நாய் (Otter) – சத்தம் போடாமல் பின்னால் வந்து வீடியோ எடுத்தவரை பாய்ந்து கடித்த பரிதாபம்!

Singapore Maritime Week-ன் தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் ஈஸ்வரன், “திறமையான பணியாளர்களை ஈர்ப்பதற்காக scholarships மற்றும் விருதுகளை சிங்கப்பூர் முடிவு செய்துள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல், இத்துறையில் 200க்கும் மேற்பட்ட mid-career workers திறன் பயிற்சி பெற்றுள்ளனர்” என்றார்.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தில், தரவு பகுப்பாய்வு, தரவு அறிவியல், மென்பொருள் பொறியியல் மற்றும் நிலைத்தன்மை மேலாண்மை போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், சிங்கப்பூரின் பிரபல Straits Times ஊடகம், சிங்கப்பூரின் கடல் மற்றும் துறைமுக ஆணையத்திடம் (MPA) முதலில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் திருத்தப்பட்டதா? என்று கேள்வி எழுப்பியிருந்தது. அப்படி திருத்தப்பட்டது எனில், அதன் காரணம் என்ன? என்றும் கேட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts