TamilSaaga

சிங்கப்பூரின் “சோவா சூ காங்” Dormitory நிலைமை படுமோசம்.. ரணவேதனை அனுபவிக்கும் வெளிநாட்டு ஊழியர் – பாடுபடுத்தும் கோவிட்

சிங்கப்பூரில் பலர், வெளியே சென்று வரும் சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள். ஆனால் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களின் நிலைமை இப்படி இல்லை. அவர்கள் பெரும்பாலும் தங்கள் பணியிடங்கள் மற்றும் தங்குமிடங்களில் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும் Aljazeera செய்தி வெளியிட்டுள்ளது.

ஆசியாவின் நிதி மையமாக கடந்த தசாப்தங்களில் பெரும் வளர்ச்சியை கண்டு வந்தது சிங்கப்பூர். இந்த வளர்ச்சிக்கு பின்புலமாக இருந்தது, புலம்பெயர் தொழிலாளர்கள். பொருளாதாரத்தில் சிங்கப்பூர் பெற்றுள்ள வெற்றிக்கு உலகளாவிய தொழிலாளர்களின் மிகப்பெரிய உழைப்பே காரணம்.

கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தொடர்பான வேலைகளில் இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளை சேர்ந்த சுமார் 3 லட்சம் பேர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் குறைந்த ஊதியம் பெறும் பணிகளையே செய்து வருகின்றனர். இவர்கள் பொதுவாக நகரின் வெளிப்புறங்களில் இருக்கும் வளாகங்களில் தான் தங்கி வருகின்றனர். இந்த வளாகங்களில் இடவசதி மற்றும் அடிப்படை வசதிகள் சற்று குறைவாகவே இருக்கும். சிறிய தங்குமிடங்கள் மற்றும் சுகாதாரமற்ற வாழ்க்கை நிலைமைகள் காரணமாக கடந்த ஆண்டு, புலம் பெயர் தொழிலாளர்களிடையே அதிகளவில் கொரோனா தொற்றுக்கள் ஏற்பட்டன. அவர்கள் தங்குமிடங்களை விட்டு வெளியே செல்ல விரும்பினால் தங்கள் முதலாளிகளிடம் அனுமதி பெற வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொழுதுபோக்கு மையங்களில் மட்டுமே பெரும்பாலும் அவர்கள் கலந்து பழக முடியும்.

மேலும் படிக்க – “சிங்கப்பூர் Shipyard Permitல் உடனடி வேலை” – வேலைக்கான பயிற்சி சென்னையில் அளிக்கப்படும்

தொற்றுப்பரவல் ஏற்படும் ஆபத்து இருப்பதால் நாட்டின் பிற பகுதிகளைப் பாதுகாக்க இந்தக்கட்டுப்பாடுகள் அனைத்தும் அவசியம் என்று அரசு வாதிட்டது. தொழிலாளர்களின் தங்குமிடத்தை மேம்படுத்துவதற்கான பல முயற்சிகளுக்குப் பிறகும்கூட, பெரும்பாலான சிங்கப்பூர்வாசிகளை விட அதிக நெரிசலான வீடுகளில் இவர்கள் தொடர்ந்து வாழ்கின்றனர்.

தற்போது தொற்று எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது.ஆனாலும் பெரும்பாலானவர்கள் வேலைக்காக செல்வது தவிர வேறு எங்கும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. உலகில் இதுவரை எவரும் எதிர்கொள்ளாத அளவிற்கு நீண்டகால கட்டுப்பாடுகள் இங்கு நிலவுகின்றன.

வரிசையாக அமைந்திருக்கும் வீடுகளுக்கும், பரபரக்கும் சாலைக்கும் நடுவில், சோவா சூ காங் (Choa Chu Kang) புலம்பெயர்ந்த தொழிலாளர் வளாகம் அமைந்துள்ளது. ஆனால் இதை கண்டுக்கொள்ள தான் ஆளில்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

இதே போல், சிங்கப்பூர் தீவின் வடமேற்கில் அமைந்துள்ள தற்காலிக புலம்பெயர்ந்த தொழிலாளர் வளாகத்தில் இருப்பவர்களுக்கு அந்த 4 சுவர்கள் தான் எல்லாமே. வெளியில் சாலைகளில் செல்பவர்கள் கூட உள்ளே இருப்பவர்களை பார்ப்பது சாத்தியமில்லாதது.

சுவருக்குப் பின்னால் ஒரே மாதிரியான நீல நிறமுறைய கூரைகளில் தங்கும் விடுதிகள் உள்ளன. இங்கு முட்கம்பி வேலிகள் எல்லா இடங்களிலும் உள்ளன. வளாகத்தில் கூடைப்பந்து மைதானம் ஒன்றுள்ளது. இவர்களுக்கான பொழுதுபோக்கு இடமும் அது தான்.

3 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களில் 98 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் முறையான கொரோனா ஊசியை செலுத்திய பின்பும், மற்றவர்களை போல் அவர்களுக்கான சுதந்திரம் இல்லை.

“இது எங்களுக்கு தாழ்வு மனப்பான்மையை அளிக்கிறது. ஏனென்றால் கொரோனாவுக்கு முன் வெளியில் செல்லலாம். போக்குவரத்தைப் பயன்படுத்தலாம். எல்லாவற்றையும் செய்யலாம். அப்போது, வெளிநாட்டு தொழிலாளர்கள் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை” என்று பங்களாதேஷில் இருந்து வந்து கட்டுமானத்தில் பணிபுரியும் 36 வயதான நாராயண் கூறியதாக அல்கஸீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

“இப்போது நாங்கள் வெளியில் செல்ல முடியாது. இப்போது நாங்கள் வெளிநாட்டு தொழிலாளர்கள் என்பதை நினைவில் கொள்கிறோம். இது சாதாரண வாழ்க்கை இல்லை” என்கிறார், அவர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, நாராயண் போன்ற தொழிலாளர்கள் கடுமையான கோவிட்-19 கட்டுப்பாடுகளின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் தங்குமிட வளாகத்தை விட்டு வெளியேறுவது வேலைக்குச் செல்வதற்கு தான். அருகாமையில் அவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள பொழுதுபோக்கு மையங்களுக்குச் செல்ல அவர்கள் விரும்பினால், தங்கும் விடுதியை விட்டு வெளியேற அனுமதிக்கும் பாஸுக்கு செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க – உஷாரய்யா உஷாரு.. சிங்கப்பூர் மக்களைக் குறிவைக்கும் 5 வேலைவாய்ப்பு மோசடி – எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி போட்ட 3,000 தொழிலாளர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் பொது இடங்களுக்குச் செல்லக்கூடிய எண்ணிக்கையில் இருமடங்காகும். பெரும்பாலான ஆண்கள் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்கிறார்கள்.

இத்தகைய கட்டுப்படுத்தப்பட்ட இருப்பு மற்ற சிங்கப்பூர் குடியிருப்பாளர்களின் வாழ்க்கைக்கு முற்றிலும் மாறுபட்டது. ஏறக்குறைய 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் இருக்கும் நாராயண், தனது வாழ்க்கையின் மீதான கட்டுப்பாடுகளால் விரக்தியடைந்து வருகிறார்.

“அரசாங்கம் எங்களைப் பற்றி சிந்திக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நாம் மனிதர்கள். எங்களால் இவ்வளவு நாள் தங்கும் விடுதிகளில் இருக்க முடியாது. குறிப்பாக மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. இது சாதாரண வாழ்க்கையும் அல்ல” என்கிறார், மன உளைச்சலில் இருக்கும் நாராயண்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா சிங்கப்பூருக்கு முதன்முதலில் வந்தபோது, முறையான திட்டமிடலை அரசு முன்னெடுத்தது. ஆனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நெருக்கடியான இருப்பிடம் கொரோனாவை அதிகரித்தது.

இந்தியாவை விடச் சிறிய நாடான சிங்கப்பூர் கொரோனாவைச் சிறப்பாகக் கையாண்டதாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வந்தன. ஆனால், சிங்கப்பூரில் இரண்டாவது கொரோனா அலை உருவானதற்குக் காரணமே புலம்பெயர் தொழிலாளர்களின் சுகாதாரத்தை அலட்சியமாகக் கையாண்டதுதான் எனக் கூறப்படுகிறது. மார்ச் மாதத்தில் வெறும் 200 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக சிங்கப்பூர் அறிவித்திருந்த நிலையில் ஏப்ரல் இறுதியில் பாதிப்பு எண்ணிக்கைப் பத்தாயிரத்தைக் கடந்திருந்தது. புலம்பெயர் கூலித் தொழிலாளர்கள் குறிப்பாக இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் வசிக்கும் மிகக் குறுகலான வளாகங்கள் அங்கே அதிகம். ஒரு சிறிய அறையில் 20 பேர் என ஒரு வளாகத்தில் மட்டும் 24,000 பேர் வசிக்கும் பகுதிகள் அவை.

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அன்றாடக் கூலிக்கு உழைக்கும் அவர்கள் குறித்து சிங்கப்பூர் அரசு எவ்வித அக்கறையும் காட்டவில்லை. ஏப்ரல் தொடக்கத்தில் இதே வளாகங்களில் கொரோனா ஊடுருவியபோது அது அதிவேகமாகப் பரவ அவர்களின் சுகாதாரச் சூழலை சிங்கப்பூர் அரசு ஒட்டுமொத்தமாகக் கைவிட்டதே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

“2020ல் தொற்றுநோய் தாக்கியபோது, சிங்கப்பூரில் பாதிக்கப்பட்ட 90 சதவீதம் பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்தான். இது நீடித்த கட்டுப்பாடுகளை விதித்ததாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 2020 முதல் முழு லாக்டவுன் விதிக்கப்பட்டன. தொழிலாளர்கள் தங்களுடைய தங்குமிடங்களில் தங்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். பொதுவான பகுதிகளில் மற்ற தொழிலாளர்களுடன் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அந்த நேரத்தில், உள்ளே இருக்கும் தொழிலாளர்களுக்கும் வெளியே உள்ள மற்ற சமூகத்திற்கும் இடையிலான உறவு சிதைந்தது.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வீட்டு வேலைக்கு அமர்த்துவது எப்படி? நடைமுறைகள் என்ன? – விரிவான தகவல்களுடன் Complete Report

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வங்கதேசத்தில் இருந்து சிங்கப்பூர் வந்த முகமது, கடந்த 8 மாதங்களாக தனது பணியிடத்தில் விபத்துக்குள்ளானதால் அறையில் சிக்கிக் கொண்டார். டாக்டரைப் பார்க்க மட்டுமே அவர் வெளியேற அனுமதிக்கப்படுகிறார்.

“நாம் அனைவரும் மனிதர்கள். அனைவருக்கும் ஒரே உரிமைகள் உள்ளன. கொரோனா அனைவருக்கும் சமமான ஆபத்தை விளைவிக்கின்றன. நாம் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஏன் எங்களை வித்தியாசமாக நடத்துகிறார்கள் என்று சட்டமியற்றுபவர்களிடம் கேட்க விரும்புகிறேன். மனிதர்களாகிய எங்களுக்கு சுதந்திரம் தேவை” என்கிறார், முகமது.

கொரோனாவை தவிர மற்ற நோயால் பாதிக்கப்படும் போதும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளியே வர முடியாத நிலையே நீடிப்பதாக வேதனை தெரிவிக்கும் முகமது, சுதந்திர வாழ்க்கை எப்போது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிங்கப்பூர் மற்றும் பிற இடங்களில் கடுமையான தனிமைப்படுத்தல் விதிகள் காரணமாக பயணம் எளிமையானதாக இல்லை என்பதால் பலரும், தங்கக்கூண்டில் அடைப்பட்ட கிளியாக மாறியுள்ளனர். மற்ற நாடுகளில் உள்ள நம் அன்புக்குரியவர்களை நம்மில் பலர் இப்போதும் நேரில் பார்க்க முடியாது என்பதே இதன் பொருள்.

தங்கும் விடுதிகளில் உள்ள ஆண்கள், பெரும்பாலும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இங்கே அவர்கள் முக்கியமாக உடலுழைப்பு வேலைகளைச் செய்கிறார்கள். சிங்கப்பூரில் வேலைக்கு வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிக திறமை வாய்ந்தவர்கள். வேலையில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அவர்கள் கண்ணியமானவர்களும் கூட. இதனை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். இதனை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளார்கள். அவர்கள் கடினமாக உழைக்கக்கூடிய நபர்கள். இரவு தாமதம் ஆனாலும் வேலை செய்வார்கள். நம் சமுதாயத்திற்கு நிறைய பங்களிப்புகளை செய்துள்ளார்கள் என்று அரசும் ஒத்துக்கொள்ள தான் செய்கிறது.

‘சிங்கப்பூர் உருவாக்கப்பட்டிருப்பது புலம்பெயர் தொழிலாளர்களின் உதவியால்தான். அவர்கள் நலனில் அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது’ என்று அறிக்கை கொடுத்த அரசு, அந்த அக்கறையை கொஞ்சம் சுதந்திரத்தில், தளர்வுகளில் காட்டினால் சிறப்பாக இருக்கும் என்பது தான் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

News Source: ALJAZEERA

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts