TamilSaaga

கோமாளி வேடத்தில் குழந்தைகளை அணுகும் நபர்கள்.. சிங்கப்பூர் பள்ளிகள் குற்றச்சாட்டு – போலீஸ் விசாரனை

சிங்கப்பூரில் கோமாளிகள் போல உடையணிந்த மக்கள் பல்வேறு ஆரம்பப் பள்ளிகளில் குழந்தைகளை அணுகியதாகக் கூறப்படும் சில சம்பவங்களை பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக பல குற்ற அறிக்கைகள் பதிவு செய்யப்பட்தாக கூறுகின்றனர். திங்களன்று (செப் 20) சிஎன்ஏவிடம் “சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டதாகக் கூறுகின்ற ஒரு கல்வி மையத்துடன் குற்றச்சாட்டு உண்மையா என்பது பற்றி அதிகாரிகள் சரிபார்க்கிறார்கள்” என காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை சம்பவம் நடந்த கல்வி மையத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை ஆனால் ஸ்பீச் அகாடமி ஆசியா தனது ஊழியர் பல்வேறு தொடக்கப் பள்ளிகளுக்கு வெளியே கோமாளி உடையை உடுத்தி அலைந்து அதனால் ஏற்பட்ட பாதுகாப்பு கவலைகளுக்கு மன்னிப்பு கேட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படங்கள் எல்லாம் பெடோக் தெற்கு அவென்யூ 3 இல் உள்ள தேமாசெக் தொடக்கப்பள்ளி போன்றும் அதில் தோன்றிய ஒரு மனிதன் கோமாளி போல் ஆடை அணிந்திருப்பதைக் காட்டுகிவதாக கூறப்படுகிறது.

மரைன் பரேடில் அமைந்துள்ள தாவோ நான் பள்ளிதில் கோமாளி உடையணிந்த மக்கள் தொடக்கப் பள்ளிகளைச் சுற்றித் திரிவதையும் மாணவர்கள் அவர்களைப் பின்தொடருமாறு கோருவதையும் பற்றி காவல்துறையினர் எச்சரித்து பெற்றோருக்கு அது தொடர்பாக அறிவித்ததாக கூறியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளில் கோமாளிகளாக உடையணிந்தவர்கள் குழந்தைகளுக்கு அவர்களைப் பின்தொடர பணம் கொடுப்பதாக கூறி சாட்டுகின்றனர்.

ஸ்பீச் அகாடமி ஆசியா ஒரு கோமாளியாக உடையணிந்த விளம்பரதாரர் தனது ஊழியர்களில் ஒருவர் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது ஆனால் அதன் குழு உறுப்பினர்கள் “குழந்தைகள் அவர்களைப் பின்தொடர்வதற்கு எந்தவிதமான பண வெகுமதிகளையும் வழங்கவில்லை” என்று கூறியுள்ளது.

“கூடுதலாக, எங்கள் விளம்பரதாரர்கள் கண்டிப்பாக குழந்தைகளை அருகில் இருந்து வெளியே அழைத்துச் செல்லவில்லை” என்று அந்த நிறுவனம் திங்கள்கிழமை பிற்பகல் ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

Related posts