TamilSaaga

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சிங்கப்பூர்.. ஏப்ரல் 26 முதல் அமலாகும் புதிய தளர்வுகள் – ஒரு Complete Report

உலக அளவில் மீண்டு சில நாடுகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே நேரத்தில் உலகின் பல நாடுகளும் தங்கள் எல்லை கட்டுப்பாடுகளை முற்றிலும் நீக்கி வருகின்றது. அதே போல உள்ளூர் மக்களுக்கும் தளர்வுகளை அளித்து வருகின்றது.

அந்த வகையில் சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் நேற்று நேற்று ஏப்ரல் 22ம் தேதி பல தளர்வுகளை அறிவித்துள்ளது. அவை அனைத்து பின்வருமாறு..

வெளிநாட்டினருக்கு…

இனி சிங்கப்பூர் வரும் வெளிநாட்டினர் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்கும் பட்சத்தில் அவர்கள் சிங்கப்பூர் புறப்படுவதற்கு முன்பாக எடுக்கவேண்டிய பெருந்தொற்று சோதனையை எடுக்க தேவையில்லை. அதே நேரத்தில் ஒரு தடுப்பூசி மட்டுமே போட்டவர்கள் என்ற நிச்சயம் சிங்கப்பூர் புறப்படுவதற்கு முன்பான பெருந்தொற்று சோதனையை எடுக்க வேண்டும்.

சிங்கப்பூர் வாழ் வெளிநாட்டு ஊழியர்கள்

ஏப்ரல் 26 முதல், வார நாட்களில் 25,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பொது இடங்களுக்கு செல்ல முடியும் என்றும், வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் 50,000 பேர் வரை (ஒரு வருகைக்கு எட்டு மணிநேரம் வரை) பொது இடங்களுக்கு செல்ல முடியும் என்று MOH தெரிவித்துள்ளது.

மேலும் தடுப்பூசி போடாத தொழிலாளர்களுக்கும் இது பொருந்தும் என்றும் அவர்களும் எந்தஇதமான Exit Pass தேவைகள் இல்லாமலும் பொதுஇடங்களுக்கு சென்றுவர முடியும்.

சிங்கப்பூரர்களுக்கு

குழு அளவு வரம்பு மற்றும் சமூக இடைவெளி

இதுவரை பொதுவெளியில் மற்றும் வீட்டிற்குள் அதிகபட்சமாக 10 பேர் வரை கூட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த வரம்பு நீக்கப்படுகிறது. கல்யாணம் மற்றும் இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளிலும் இது பொருந்தும்.

குழு அளவு வரம்புகள் நீக்கப்பட்டதால், தனிநபர்களுக்கிடையில் அல்லது குழுக்களுக்கிடையில், வீட்டிற்குள்ளும் வெளியிலும் பாதுகாப்பான தூரம் (Social Distancing) இனி தேவைப்படாது.

சிங்கப்பூரில் ஏப்ரல் 26 முதல் அனைத்து ஊழியர்களும் பணியிடத்திற்கு திரும்ப வேண்டும் – MOM உத்தரவு

மாஸ்க் அணிவது கட்டாயம்

பொது போக்குவரத்து உட்பட, மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஹோட்டல் உள்ளிட்ட உட்புற அமைப்புகளில் முகமூடிகள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். பொதுவெளியில் அது தேவையில்லை என்றபோது மக்கள் பொதுவெளியில் முகமூடியை பயன்படுத்த அரசு ஊக்குவிக்கிறது.

பணியிடங்களுக்கு திரும்ப அனுமதி

ஏப்ரல் 26 முதல், அனைத்து தொழிலாளர்களும் பணியிடத்திற்குத் திரும்பலாம், தற்போதைய வரம்புப்படி 75 சதவிகிதம் பணியிடங்களில் உள்ள நிலையில் மீதமுள்ளோர் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1000 பேருக்கு அதிகமானோர் கலந்துகொள்ளும் நிகழ்வுகள்

1000 பேருக்கு அதிகமான மக்களுடன் நடத்தப்படும் நிகழ்வுகளில் 75 சதவிகிதம் பேர் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டது, தற்போது அந்த அளவு தடையும் நீக்கப்படுகிறது.

அதே நேரத்தில் இரவு நேர கேளிக்கை விடுதிகளில் தொடர்ந்து அந்த 75 சதவிகித அளவு கடைபிடிக்கப்படும் அதற்கு எந்தவித தளர்வுகளும் இருக்காது.

சிங்கப்பூர்.. கழிவறையில் இளம்பெண்ணை ஆபாசமாக படமெடுத்த இந்திய தொழிலாளி.. போனை சோதித்ததில் அதிர்ந்து போன போலீஸ் – சிங்கை சிறையில் பிரசாந்த்!

உடல்நலம் குறித்த அறிவிப்புகள்

கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் இனி ஆன்லைனில் தங்கள் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டியதில்லை, ஆனால் சமூகப் பொறுப்பைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts