TamilSaaga

சிங்கப்பூர்.. குறைந்த வருமானம் கொண்ட 700 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள்.. ரம்சான் முடியும் வரை 8500 குடும்பங்களுக்கு உதவ HPB திட்டம்

சிங்கப்பூரில் எதிர்வரும் விழா காலங்களை முன்னிட்டு வருமானம் குறைந்த 700 சிங்கப்பூர் குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய பரிசு பொதிகள் வழங்கப்பட்டன. இன்று சனிக்கிழமை ஏப்ரல் 23ம் தேதி இந்த பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

Kembanganனில் உள்ள முஹம்மதியா சங்கத்தின் முன்னெடுப்பில், சுகாதார மேம்பாட்டு வாரியம் (HPB) மற்றும் 42 சமூக தொண்டர்களின் பங்களிப்பு மூலம் இந்த சேவை வசதி குறைந்த குடும்பங்களுக்கு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ரம்சான் மற்றும் ஹரி ராயா பண்டிகைக் காலங்களில் பானங்கள் மற்றும் இனிப்புகளின் மூலம் உட்கொள்ளப்படும் சர்க்கரை அளவை குறைப்பது போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதற்கு சமூகத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட HPBன் இரண்டு மாத கால பிரச்சாரத்தை நிறைவு செய்வதாகவும் இந்த பொதிகள் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

“ஏப்ரல் 30 வரை இலவச Shuttle Bus சேவை”.. இரண்டு முக்கிய இடங்களில் இருந்து JB சுங்கச்சாவடிக்கு செல்ல ஏற்பாடு – முதல்வர் Onn Hafiz Ghazi அறிவிப்பு

குடும்பங்கள் குறைந்த சர்க்கரையுடன் பானங்கள் மற்றும் இனிப்பு வகைகளை எப்படித் தயாரிக்கலாம் என்பது பற்றிய தகவல்களும், புகைப்பிடிப்பதை நிறுத்த விரும்பும் புகைப்பிடிப்பவர்களுக்கான குறிப்புகளின் சிறு புத்தகமும் இந்த பொதிகளில் வைக்கப்பட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நாடாளுமன்ற சுகாதாரத்துறை செயலாளர் ரஹாயு மஹ்ஜாம், ரமலான் மாதத்தில் சமூகத்திற்கு உணவு பொட்டலங்கள் வழங்குவது வழக்கம் என்று கூறினார்.

விசித்திரமான Bag.. சிங்கப்பூர் தெருக்களில் வலம்வரும் “அதிசய மனிதர்”.. ஏன்? – புதியதோர் அம்சத்தை சிங்கையில் வெளியிடும் ஆப்பிள் நிறுவனம்

கடந்த ஏப்ரல் 9ம் தேதி தொடங்கிய இந்த பொதிகள் வழங்கும் திட்டம், ரமலான் இறுதி வரை தொடரும், மொத்தம் 8,500 குடும்பங்களைச் சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்றுவரை, 5,900க்கும் மேற்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் பொதிகளைப் பெற்றுள்ளன என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts