சிங்கப்பூர் மட்டுமல்லாமல் உலக அளவில் உள்ள பல நாடுகளுக்கு செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அங்கு உள்ளவர்களுடன் தொடர்புகொள்ள நிச்சயம் ஆங்கிலம் அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனால் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு பணிநிமித்தமாக வரும் பல புலம்பெயர் தொழிலாளர்கள் இன்றளவும் ஆங்கிலம் பேச சற்று சிரமப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர்த் தொழிலாளர்களுக்கு பல உதவிகளை பல ஆண்டு காலமாக செய்து வருகின்ற ItsRainingRainCoat நிறுவனம் தற்போது வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இலவச ஆங்கில பயிற்சி வகுப்புகளை எடுக்க உள்ளது.
இலவசமாக ஆங்கிலம் கற்க இங்கே கிளிக் செய்யுங்கள்
இதுகுறித்த ஒரு முழுநீள தகவலை தங்களது முகநூல் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது அந்த நிறுவனம். இதன்மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலவசமாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள முடியும். அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சமூக சேவையாளர்கள் வீடியோ கால் மூலம் ஆங்கில பயிற்சிகளை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அளிப்பார்கள்.
இந்த வகுப்புகள் 45 முதல் 60 நிமிடங்கள் வரை நடைபெறும், இதற்கு எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்த ஒரு விளக்கத்தையும் அந்த நிறுவனம் தனது முகநூல் பதிவில் அளித்துள்ளது. அதில் உங்கள் பெயர் உங்கள் அலைபேசி எண், உங்கள் தாய் மொழி ஆகியவற்றை உள்ளீடு செய்து அந்த சேவையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தாய் மொழிக்கு பின் ஆங்கிலம் நமக்கு பல இடங்களில் பயன்படுகிறது என்பதால் நிச்சயம் இன்னொரு மொழியை கற்றுக்கொள்வதில் எந்தவித தவறும் இல்லை. ஆகவே சிங்கப்பூர் வாழ் புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.