TamilSaaga

சிங்கப்பூர் மலேசியா எல்லை திறப்பு? ஜோகூர் மாநில அரசு முன்னெடுப்பு – துரிதமாகும் தடுப்பூசி திட்டம்

சிங்கப்பூர் மலேசியா இடையே இணைப்பாக செயல்பட்டு வந்த ஜோகூர் பாலம் கொரோனா தாக்கத்தின் காரணமாக கடந்த 18 மாதங்கள் முன்பு மூடப்பட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்த பாலம் தற்போது எந்தவித நடமாட்டமும் இல்லாமல் அமைதியாக காணப்படுகிறது.

ஆயிரக்கணக்கான மலேசியர்கள் தங்களின் வேலையினை சிங்கப்பூரில் இழந்திருப்பதாலும் தங்கள் இல்லங்களை விட்டு பிரிந்து சிங்கப்பூரிலேயே தங்கியிருக்க வேண்டிய சூழல் இருப்பதாலும் பாலத்தின் பயன்பாடும் பெரிதாக காணப்படவில்லை.

தற்போது ஜோகூர் மாநில அரசாங்கமானது சுயமாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கொரோனாவால் முடங்கியுள்ள இந்த பாலத்தின் செயல்பாடுகளை மீண்டும் துவங்க முழுமையாக தடுப்பூசி செலுத்தும் முயற்சியில் களம் இறங்கியுள்ளது.

“அக்டோபர் மாதம் இறுதிக்குள்ளாக சுமார் 80% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது அதுவே எங்கள் இலக்கு” என அந்த மாநில முதல்வர் ஹஸ்னி முகம்மது அவர்கள் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்படும் போது எல்லைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts