TamilSaaga

“பள்ளிகளில் குறிப்பிட்ட நடவடிக்கைள் மீண்டும் தொடங்கலாம்” – சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் அறிவிப்பு

சிங்கப்பூரில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி தொடங்கி ஏற்கனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்வுபெற இருக்கின்றன. அதிலும் குறிப்பாக முழுமையாக 2 டேஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு அதிக அளவிலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள பள்ளிகளில் எந்த விதமான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம்.

சிங்கப்பூரில் உள்ள பள்ளிகளிலும், உயர்கல்வி நிலையங்களிலும் வருகின்ற செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் 10ம் தேதி முதல் குறிப்பிட்ட சில நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க கல்வி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் பள்ளிகளில் முகக்கவசத்துடன் உள்ளரங்கு மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளில் அதிகபட்சமாக ஐந்து பேர் வரை கலந்து கொள்ள முடியும்.

மேல்நிலைப் பள்ளிகள், ஜூனியர் கல்லூரிகள், மில்லினியா இன்ஸ்டிடியூட் மற்றும் சீனியர் அல்லது செகண்டரி பிரிவுகளைக் கொண்ட சிறப்பு கல்வி (ஸ்பீட்) பள்ளிகளும் ஐந்து பேர் கொண்ட குழுக்களாக தனிப்பட்ட பாடத்திட்ட நடவடிக்கைகளை (CCAs) மீண்டும் தொடங்கலாம்.

கூடுதலாக, வெளிப்புற விற்பனையாளர்களால் அல்லது வெளிப்புற இடங்களில் நடத்தப்படும் தனிப்பட்ட நடவடிக்கைகள் தேசிய வழிகாட்டுதல்களுடன் கண்டிப்பாக கடைபிடித்து 50 பேர் வரை மீண்டும் தொடங்கலாம் என்று MOE தெரிவித்துள்ளது.

Related posts