TamilSaaga

“சிங்கப்பூரில் மரணதண்டை விதிக்கப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர்” : குவியும் கருணை மனுக்கள்

வரும் வாரம் இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் ஒருவரை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்கான ஆன்லைன் மனுவில் கிட்டத்தட்ட 40,000 பேரிடம் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மனித உரிமை ஆர்வலர்கள் அவருடைய மரணதண்டனையை நிறுத்துமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அவர் “அறிவுசார் ஊனமுற்றவர்” Intellectually Disabled என்று மக்கள் கூறினார்.

சிங்கப்பூரின் சாங்கி சிறையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நாகேந்திரன் கே தர்மலிங்கம், போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக 2010ம் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் (MHA) கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. சிங்கப்பூருக்கு போதைப்பொருள் இறக்குமதி செய்ததற்காக 2010ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இதுவாகும்.

மேலும் நாகேந்திரனின் குடும்பத்திற்கு மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் வருவதற்கான பயண ஏற்பாடுகளில் உதவுவதாகவும் MHA தெரிவித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட அவரது பார்வையாளர்கள் தினமும் நேருக்கு நேர் சந்திப்பிற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் MHA கூறியதாக சிங்கப்பூர் டேப்லாய்டு தெரிவித்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்னர் 42.72 கிராம் ஹெராயின் இறக்குமதி செய்ததற்காக 2010 நவம்பரில் நாகேந்திரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நாகேந்திரன் நவம்பர் 10ம் தேதி தூக்கிலிடப்படுவார் என்று ஊடகங்கள் மேற்கோள்காட்டி இணையத்தள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் நாகேந்திரனுக்கு மன்னிப்புக் கோரி குடியரசுத் தலைவர் ஹலிமா யாக்கூப்பிடம் மனு தாக்கல் அக்டோபர் 29ம் தேதி தொடங்கப்பட்டது. குடியரசுத் தலைவரின் கருணை மனுவுக்கு ஆதரவாக 50,000 கையெழுத்துக்கள் கோரப்பட்டது. இதில் நேற்று வியாழன் நிலவரப்படி 39,962 கையெழுத்துக்களை சேகரித்துள்ளது.

Related posts